சென்னை, ஜூன் 11- தமிழ்நாட்டில் 40 வயதிற்கு மேற்பட்ட வர்கள் ஓட்டுநர் உரிமம் புதிதாக பெறவும், புதுப்பிக்கவும் மருத்துவச் சான்று கட்டாயம் இணைக் கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாது காப்பு ஆணையர் தெரிவித் துள்ளார்.
அதாவது, ஒன்றிய அரசின் மோட்டார் வாகன விதி எண்.5-இன் படி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெற்ற பின்னர் புதிய ஓட்டுநர் உரிமம் பெற முடியும்.
அதேபோல், பழைய ஓட்டுநர் உரிமத்தை புதுப் பிக்க முடியும் என்று கூறி யுள்ள சாலைப் பாதுகாப்பு ஆணையர், மாநிலத்தின் ஒரு சில இடங்களில் – தகுதி வாய்ந்த மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெறாமல் போலி மருத்துவர்களிடம் சான்றிதழ்கள் பெறும் நிகழ்வுகளைத் தடுக்க வும் நடவடிக்கை எடுக் கப்பட்டு உள்ளதாக குறிப் பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment