முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, சென்னை கிழக்கு மாவட்டம், எழும்பூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் நேற்று (12.06.2024), சென்னை, வேப்பேரி, பெரியார் திடலில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் 27 இணையர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, வீட்டு உபயோக பொருட்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி (திரு.வி.க. நகர்), வெற்றி அழகன் (வில்லிவாக்கம்), ஜோசப் சாமுவேல் (அம்பத்தூர்), மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரவிச்சந்திரன், பகுதி செயலாளர்கள் வி.சுதாகர், சொ.வேலு (மயிலை), மண்டலக் குழுத் தலைவர்கள் சிறீராமலு, சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்வரி சிறீதர், பரிதி இளம்சுருதி மற்றும் தி.மு.கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Thursday, June 13, 2024
Home
தமிழ்நாடு
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி பெரியார் திடலில் 27 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைப்பு
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி பெரியார் திடலில் 27 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment