சென்னை, ஜூன் 15- முதல மைச்சரின் கனவு திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம், 2022-2023 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரி வித்துள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களை, படிப்பில் மட்டு மல்லாது, வாழ்க்கையிலும் வெற்றி யாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய “நான் முதல்வன்” திட்டம் 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு, ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு “நான் முதல்வன்” திட்டம் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 13 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் 8 லட்சத்து 53 ஆயிரத்து 605 பேர், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 784 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றுள்ளனர். 2023-2024ஆம் கல்வியாண்டில் 10 பல்கலைக்கழகங்களை சேர்ந்த 26 ஆயிரத்து 394 ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. மைக்ரோசாஃப்ட், அய்பிஎம், இன்ஃபோசிஸ், எஸ்.ஏ. பி., கூகுள் கேம்பிரிட்ஜ், சிமன்ஸ், டசால்ட் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், மின் வாகனம், டிஜிட்டல் மார்க்கெட்டிங் உள்ளிட்ட துறைகளில் பயிற்சி வழங் கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியின் மூலம் 2022-2023ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 149 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 76.4 சதவிகிதம் பொறியியல் மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். 83.8 சதவிகிதம் கலை அறிவியல் மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். ஒன்றிய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதுபவர்களுக்குஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1000 பேருக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங் கப்பட்டுள்ளது.
நான் முதல்வன் திட்டத்தால் மாணவர்கள், இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment