புகலிடம் தேடிச் சென்றவர்கள் அடிமைகள் போல் நடத்தப்பட்ட கொடூரம் ஹங்கேரி நாட்டிற்கு ரூ.1,800 கோடி அபராதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 15, 2024

புகலிடம் தேடிச் சென்றவர்கள் அடிமைகள் போல் நடத்தப்பட்ட கொடூரம் ஹங்கேரி நாட்டிற்கு ரூ.1,800 கோடி அபராதம்

புடாபெஸ்ட், ஜூன் 15- அகதிகளை எப்படி நடத்தவேண்டும் என்று அய்ரோப்பிய யூனியன் ஏற்படுத்தியுள்ள விதிமுறைகளை மீறி அவர்களை அடிமைகள் போல் நடத்திய குற்றத்துக்காக, ஹங்கேரிக்கு அய்ரோப்பிய நீதிமன்றம் 20 கோடி யூரோ (ரூ.1,800 கோடி) அபராதம் விதித்துள்ளது. மேலும், அந்த அபராதத்தைக் கட்டத் தவறும் ஒவ்வொரு நாளும் கூடுதலாக 10 லட்சம் யூரோ செலுத்த வேண்டும் என்றும் ஹங்கேரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அகதிகள் குடியேற்றத்துக்கு எதிராக மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்த அந்நாட்டு பிரதமா் விக்டா் அா்பன் தலைமையிலான ஹங்கேரி அரசு, அகதிகளை அடிமைகள் போல் நடத்துவதாகவும் விலங்குகளைப் போல் அவர்கள் அடைத்துவைத்து துன்புறுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஹங்கேரி 18 ஆம் நூற்றாண்டில் காங்கோ நாட்டை அடிமைப்படுத்தி தங்கச்சுரங்கம் வெட்டுவதற்காக லட்சக்கணக்கான காங்கோ நாட்டுமக்களை மிகவும் கொடூரமாக துன்புறுத்தியது, தப்பி ஓடாமல் இருக்க கால்களில் துளைபோட்டு கட்டிப்போடுவதும், முதுகுமற்றும் பிட்டப்பகுதிகளில் கொக்கிகளை மாட்டி அதனோடு சங்கிலிகளை இணைத்து மரங்களில் கட்டிப் போடுவதும் நாக்கை வெட்டி வீசுவது என பல கொடூரமான செயல்களைச் செய்தனர். அதற்கான அய்க்கிய நாடுகள் அவை காங்கோமக்களிடம் மன்னிப்புக் கோரக்கூறியும் இதுவரை மன்னிப்புக் கூறவில்லை.

No comments:

Post a Comment