இது என்ன கூத்து? சந்திரபாபு நாயுடு பதவியேற்ற ஒரு வாரத்தில் அவரது பேரனுக்கு 1.7 கோடி வருமானமாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 13, 2024

இது என்ன கூத்து? சந்திரபாபு நாயுடு பதவியேற்ற ஒரு வாரத்தில் அவரது பேரனுக்கு 1.7 கோடி வருமானமாம்!

புதுடில்லி. ஜூன் 13- ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 135 தொகுதிகளில் வென்று தனிப் பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது.
இதையடுத்து, அவர் ஆந்திர மாநிலத்தின் முதல மைச்சராக நான்காவது முறையாக நேற்று (12.6.2024) பதவியேற்றுக் கொண்டார்.

இதையடுத்து சந்திரபாபு நாயுடு குடும்பத்தினரால் நடத்தப்படும் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு சாதனை உச்சத்தை தொட்டது.

ஹெரிடேஜ்ஃபுட்ஸ் பங்குகளின் விலை இரண்டு வாரங்களில் இரண்டு மடங்கு அதிகரித்தது.

இதனால், அந்த நிறுவ னத்தில் 35.7 சதவீதபங்குகளை வைத்திருக்கும் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருக்கு ‘ஜாக்பாட்’ அடித்தது.

ஹெரிடேஜ் நிறுவனத்தில் சந்திரபாபு நாயுடு மனைவி புவனேஸ்வரிக்கு 34.37 சதவீத பங்குகளும், மகன் லோகேஷுக்கு 10.82 சதவீத பங்குகளும், மருமகள் பிராமணிக்கு 0.46 சதவீத பங்குகளும், அவரது 9 வயது பேரன் தேவன்ஷுக்கு 0.06 சதவீத பங்குகளும் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில், சந்திர பாபு நாயுடு தேர்தல் வெற்றி யின் எதிரொலியால் ஹெரி டேஜ் பங்குகளின் விலை அதிகரித்ததை தொடர்ந்து தேவன்ஷ் வைத்திருக்கும் 56,075 பங்குகளின் மதிப்பு ஜூன் 3 அன்று ரூ.2.4 கோடி யாக இருந்த நிலையில் அது ரூ.4.1 கோடியாக அதிகரித் துள்ளது. ஒரே வாரத்தில் தேவன்ஷுக்கு பங்குச் சந்தை யின் மூலமாக ரூ.1.7 கோடி லாபம் கிடைத்துள்ளது.

ஹெரிடேஜ் புட்ஸ் பங்கு மதிப்பு மும்பை பங் குச் சந்தையில் 52 வார அதிக பட்சமாக ரூ.727.9-அய் எட்டி யதால் சந்திரபாபு நாயுடு குடும்பம் ரூ.1,225 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

மே 23 அன்று அந்நிறு வனப் பங்கின் விலை ரூ.354.5ஆக மட்டுமே காணப் பட்டது. ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனம் கடந்த 1992இல் தொடங்கப்பட்டது.

இந்தியாவில் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் விற்பனையில் அது ஈடுபட்டு வருகிறது.

இதில், தயிர், நெய், பனீர் உள்ளிட்டவை அடங்கும். இந்தியா முழுவதும் 11 மாநி லங்களில் 15 மில்லியன் குடும்பங்கள் ஹெரிடேஜ் வாடிக்கையாளர்களாக உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment