படித்து எம்.ஏ., டாக்டர் முதலிய பட்டங்கள் பெற்ற பையனும், ஒரு காப்பிக் கடைக்குப் போனால், தனது சுயமரியாதையற்று, அங்கு எச்சில் கிண்ணம் தூக்குபவனைக் கண்டு “சாமி ஒரு கப் காபி கொண்டு வா” என்று கூப்பிடுகிறான். தான் மோட்சத்திற்குப் போவதற்கு மற்றொருவன் கையில் பணத்தைக் கொடுத்து அவன் காலில் விழுந்து கும்பிடுகிறான். தன் தேசத்தையும், மக்களையும் காட்டிக் கொடுத்து வயிறு வளர்ப்பதில் போட்டி போடுகிறான். இந்தப் பட்டமெல்லாம் கல்வியாகுமா? இதைப் பெற்றவர்கள் எல்லாம் படித்தவர்களாவார்களா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment