மதுரை, ஜூன் 7 தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் சார்பில் புதிதாக 10 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்க உள்ளதாக வெளியான ஆர்டிஅய் தகவலால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளில் அதிகபடியான கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாகன ஒட்டிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மதுரை, சென்னை உள்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் விதிமுறைகளை மீறி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சுங்கச்சாவடி களை அமைத்துள்ளதாக குற்றச்சாட்டுகளும் உள்ளன.
அந்த சுங்கச்சாவடி களை அகற்றக் கோரி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அடிக்கடி போராடங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மதுரையில் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு ஒத்தக்கடை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாகன ஓட்டிகள் மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரி மனு கொடுத்தனர்.
இதுபோல், மாநிலம் முழுவதும் பல்வேறு சுங்கச்சாவடிகள் விதி முறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் தொடர்ந்த குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாட்டில் மேலும் 10 புதிய சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக ஆர்டிஅய்-யில் வெளி யான தகவலால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி யடைந்துள்ளனர்.
மதுரை சேர்ந்த மருதுபாண்டி என்பவர், இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு ஆர்டி அய்- மூலம் பல்வேறு கேள்விகளை முன்வைத்து மனு செய்திருந்தார். அந்த கேள்விகளுக்கு வந்த பதில்கள் வருமாறு: “நாடு முழுவதும் 26 மண்டலங்களின் கீழ் சுமார் 805 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் மதுரை மண்டலத்தின் கீழ் 28 சுங்கச்சாவடிகளும், சென்னை மண்டலத்தின் கீழ் 31 என மொத்தம் 59 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக புதிய சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக மதுரை மண்டலத்தின் கீழ் மதுரை, திண்டுக்கல், காரைக்குடி மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் 10 சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை ஏற்கெ னவே 59 சுங்கச்சாவடிகள் செயல்படும் நிலையில் தற்போது கூடுதலாக 10 சுங்கச்சாவடிகள் விரைவில் திறக்கப்பட உள்ளன.
மதுரை மாவட்டத்தில் மதுரை மேலூர் முதல் காரைக்குடி நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதுபோல், வாடிப்பட்டி முதல் தாமரைப்பட்டி வரை சுற்றுவட்டச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு இடங்களில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த 2 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது,” என்று அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment