புதுடில்லி, மே 14- எதிர்க் கட்சி தலைவர்களின் ஹெலிகாப்டர்கள், வாகனங்களை அதிகா ரிகள் குறிவைக்கின்றனர் என்றும் பாஜ தலைவர் களின் வாகனங்களில் அதுபோல் சோதனைகள் செய்யப்படுமா என்று காங்கிரஸ் கேள்வி எழுப் பியுள்ளது.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பீகாரில் உள்ள சமஸ்திப்பூர், முசாபர்பூர் தொகுதிகளில் 11.5.2024 அன்று பிரச்சாரம் செய் தார்.
சமஸ்திப்பூரில் கார்கே பயணம் செய்த ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித் துள்ளது.
இதுகுறித்து பீகார் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜேஷ் ரத்தோர் தனது டிவிட் டர் பதிவில், கேரளாவில் ராகுல் காந்தி பயணம் செய்த ஹெலிகாப்டரில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
தற்போது கார்கே வந்த ஹெலிகாப்டரையும் இதே போன்று சோதனை செய்துள்ளனர். காவல் துறையினர் வெளியே பாதுகாப்புக்கு நின்று கொண்டிருக்க, பீகார் தலைமை தேர்தல் அதி காரி கண்காணிப்பில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதே போன்று இந் தியா கூட்டணி வேட்பா ளர்களின் ஹெலிகாப் டர்கள், வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகின் றன.
ஆளும் கட்சியினர் வாகனங்கள் சுதந்திரமாக இயங்க அனுமதி அளிக் கின்றனர் என்று குறிப் பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment