புதுடில்லி, மே.10– இந்தியா உள்பட உலக நாடுகளில் கரோனாவுக்கு எதிராக பயன்படுத் தப்பட்ட முக்கிய தடுப்பூசியான கோவிஷீல்டால், அரிதான சந்தர்ப்பங்களில் ரத்தம் உறைதல் போன்ற பக்கவிளைவு ஏற்படும் என அதன் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா ஒப்புக்கொண்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து இந்தியாவில் பயன்படுத் தப்படும் அனைத்து கரோனா தடுப்பூசிகளையும் மறுஆய்வு செய்யுமாறு ஒன்றிய அரசை மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
‘விழித்தெழு இந்தியா இயக்கம்’ என்ற அமைப்பை சேர்ந்த மருத்துவர்கள் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கரோனா தடுப்பூசி போட்ட பிறகு திடீர் மரணங்கள் அதிகரித்து வருவதை ஒன்றிய அரசு ஒட்டுமொத்தமாக புறக்கணித்தது. அதுமட்டு மின்றி, அறிவியல்பூர்வமான விசாரணைகள் எதுவும் இல்லாமலேயே கரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானது மற்றும் திறன்மிக்கது என்றும் கூறி வந்தது. ஆனால், கரோனா தடுப்பூசியின் பக்க விளைவைப் பற்றி உலகம் அறிந்து வருகிறது. கரோனா தடுப்பூசிகள் 3ஆம் கட்ட பரிசோ தனையை முடிக்காமலேயே பயன்படுத் தப்பட் டதை பலரும் அறியவில்லை. தடுப்பூசி குறித்த முழுமையான தகவல்கள் மற்றும் மரணம், குறுகிய கால அல்லது நீண் டகால பக்க விளைவுகள் குறித்த தரவுகள் இல்லாமலேயே இந்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்து விட்டன. எனவே, அனைத்து கரோனா தடுப்பூசிகளின் அறிவியல் குறித்து மறுஆய்வு செய்வதுடன், அவற்றின் வணிகமயமாக்கமலை தணிக்கை செய்ய வேண்டும். மேலும், தடுப்பூசி போட்டு மரணமடைந்தவர்களுக்கும் அவர் களது குடும்பத்தினருக்கும் விரைவான நீதி வழங்க விரைவு நீதிமன்றங்கள் மற்றும் தடுப்பூசி நீதிமன்றங்களை நிறுவவும் வேண்டும்.
-இவ்வாறு அந்த மருத்துவர்கள் கூறினர்
Friday, May 10, 2024
Home
இந்தியா
அனைத்து கரோனா தடுப்பு ஊசிகளையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் அரசு மருத்துவர்கள் அறிவுறுத்தல்
அனைத்து கரோனா தடுப்பு ஊசிகளையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் அரசு மருத்துவர்கள் அறிவுறுத்தல்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment