குறைந்த வட்டியில் போக்குவரத்து சங்க உறுப்பினர்களுக்கு கடன் வழங்க முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 27, 2024

குறைந்த வட்டியில் போக்குவரத்து சங்க உறுப்பினர்களுக்கு கடன் வழங்க முடிவு

சென்னை, மே 27 போக்குவரத்து கடன் சங்க உறுப்பினர்களுக்கு சிக்கன நிதிக்கான வட்டி 8 சதவீதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்துக் கழக பணியா ளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கத்தில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஆகிய கழகங்களைச் சார்ந்த பணியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். போக்குவரத்து பணியா ளர்களின் சேமிப்பை ஊக்குவித்தல், கடன் வழங்குதல் உள்ளிட்ட பணி களை கூட்டுறவு சங்கம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உறுப்பினர் களின் சிக்கன நிதிக்கு 8 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக சங்கத்தின் செயலர் (பொ) கு.உமாசந்திரன் வெளியிட்ட அறிவிப்பு: கடன் சங்க உறுப்பினர்களின் சேமிப்பு தொகையான சிக்கன நிதியின் 2023-2024-ஆம் ஆண்டுக்கான வட்டி 8 சதவீதம் கணக்கிட்டு வழங்க சொசைட்டி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சங்கத்தில் கடன் பெற்று கடனுக் குரிய தொகையை செலுத்தும் அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த மாதம் சங்கத்தில் கடனுக்காக பிடித்தம் செய்ய வேண்டிய தொகையிலிருந்து சிக்கன நிதிக்கான வட்டியை கழித்து மீதமுள்ள தொகையை தவணை பிடிப்பு பட்டியலாக அனுப்பப்படும்.கடனுக்குரிய பிடித்தம் தொகையை விட சிக்கன நிதிக்கான வட்டித் தொகை கூடுதலாக இருப்பின் அவ்வா றான உறுப்பினர்களுக்கு சங்க பிடித்தத்தில் ரூ.750 மட்டுமே பிடித்தம் செய்யப்பட்டு, மீதமுள்ள தொகை அவரவர் வங்கிக் கணக்கில் ஜூன் 1-ஆம் தேதி வரவு வைக்கப்படும்.

இவ்வாறு சிக்கன நிதிக்கான வட்டி ஜூன் 1-ஆம் தேதி நடைமுறைப்படுத்தப் படும். மேலும் விவரங்களை அன்றைய தினம் முதல் சங்கத்தில் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம். வரக்கூடிய கூட்டுறவு சங்க தேர்தலுக்கு உறுப்பினர் களுடைய ஆதார் எண், குடும்ப அட்டை எண் கட்டாயமாக்கப்பட்டுள் ளது. எனவே, சம்பந்தப்பட்ட ஆவணங் களோடு பணி விவரத்தை சங்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் சங்கத் தேர்தலில் வாக்களிக்கவோ, போட்டியிடவோ முடியாது என்றார் அவர்..

No comments:

Post a Comment