சிலந்தியாற்றில் தடுப்பணை கட்டுமானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 26, 2024

சிலந்தியாற்றில் தடுப்பணை கட்டுமானம்

சிலந்தியாற்றில் தடுப்பணை கட்டுமானம்
உடனே நிறுத்த பசுமைத் தீப்பாயம் உத்தரவு

சென்னை, மே 26- உரிய அனுமதி பெறாமல் மேற் கொள்ளப்படும் சிலந்தியாற்று தடுப்பணை கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும் என கேரள அரசுக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
அமராவதி அணைக்கு நீர் ஆதாரமாகத் திகழும் சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது. இடுக்கி மாவட்டம், தேவிகுளம் வட்டம் வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக் குட்பட்ட பெருகுடா எனும் இடத்தில் தடுப்பணையை கேரள அரசு கட்டி வருகிறது.
இது தொடர்பாக வெளியான செய்திகளை அடிப்படை யாகக் கொண்டு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப் பாயம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு, நீதித் துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வில் 24.5.2024 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவில்லை. நீரைத் தடுத்து உள்ளூர் மக்களுக்குத் தேவையான தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்வ தற்கான கலிங்குதான் அமைக்கப்பட்டு வருகிறது’ என கேரள அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட தீர்ப்பாய உறுப்பினர்கள், எந்தக் கட்டு மானம் மேற்கொள்வதாக இருந்தாலும், உரிய அனுமதி பெற்ற பின்னர்தான் பணிகளை மேற்கொள்ள வேண்டும். உரிய அனுமதி ஏற்கெனவே பெறப்பட்டிருந்தால் அதை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். உரிய அனுமதி பெறாமல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றால், அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கேரள அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment