அதானி, அம்பானிகள் காங்கிரசுக்கு வேன் நிறைய பணம் கொடுத்தார்களா?அவர்கள் வீடுகளுக்கு அமலாக்கத்துறை அனுப்பப்படுமா? பிரதமர் மோடிக்கு ராகுல் சவால் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 9, 2024

அதானி, அம்பானிகள் காங்கிரசுக்கு வேன் நிறைய பணம் கொடுத்தார்களா?அவர்கள் வீடுகளுக்கு அமலாக்கத்துறை அனுப்பப்படுமா? பிரதமர் மோடிக்கு ராகுல் சவால்

featured image

புதுடில்லி,மே 9- காங்கிரஸ் கட்சிக்கு வேன் நிறைய பணம் கொடுத்தார்களா? என்பதை விசாரிக்க அதானி, அம்பானி வீட்டுக்கு அமலாக்கத்துறையை அனுப் புமாறு பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்து உள்ளார்.
நாட்டின் பிரபல தொழிலதிபர் களான அதானி, அம்பானி குறித்து வசைபாடி வந்த காங்கிரசும், ராகுல் காந்தியும், தற்போது அதை நிறுத்தி விட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
அவர்களிடம் இருந்து வேன் நிறைய கட்டுக்கட்டாக பணம் காங்கிரஸ் பெற்றுள்ளதா? என்பதை ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பிரதமரின் இந்த உரைக்கு ராகுல் காந்தி நேற்று (8.5.2024) பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக காட்சிப் பதிவு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, பிரதமர் தனது தனிப்பட்ட அனுபவத்தை கூறியிருப்பதாக கிண்டல் செய்துள்ளார்.
அதில் அவர் மேலும் கூறியிருப் பதாவது: பிரதமர் மோடி இந்த இரண்டு தொழிலதிபர்களுக்கு (அதானி, அம்பானி) கொடுத்த பணத்தை, காங்கிரஸ் கட்சி வாக் குறுதியளித்த பல்வேறு திட்டங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு அதே தொகையை வழங்கும். பா.ஜனதாவின் இந்த வேன் ஊழலின் டிரைவர் யார்? உதவியாளர் யார்? என்பதை நாடறியும்” என்றார்.
மோடிஜி,நீங்கள் கொஞ்சம் பயப்படு கிறீர்களோ? வழக்கமாக நீங்கள் அதானி, அம்பானி குறித்து மூடிய அறைக்குள்தான் பேசுவீர்கள். ஆனால் முதல் முறையாக பொதுவெளியில் பேசியிருக்கிறீர்களே?
அவர்கள் இருவரும் வேன் நிறைய பணம் தருகிறார்கள் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கிறது. இது உங்கள் தனிப்பட்ட அனுபவமா?
ஒன்று செய்யுங்கள்… எங்க ளுக்கு வேன் நிறைய பணம் கொடுத்தார்களா? என்பது குறித்து முழுமையாக விசா ரிக்க அவர்கள் வீட்டுக்கு சி.பி.அய்., அம லாக்கத்துறை அதிகாரிகளை அனுப் புங்களேன். பயப்பட வேண்டாம்: -இவ் வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment