சென்னை, மே 13- பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரி யர்கள் தற்போதைய பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண் டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி களில் பணிபுரியும்அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறு தல் கலந்தாய்வு மே 24 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்படுகின்றன.
அதன்படி பொது மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர் கள் தற்போது பணிபுரியும் பள் ளியில் ஜூன் 1-ஆம் தேதியன்று ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும்.
இதுதவிர ஆசிரியர்கள் மாறு தல் விண்ணப்பங்களை மே 13 முதல் 17ஆ-ம் தேதி வரை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். விருப்ப மாறுதல், மன மொத்த மாறுதல், நேரடி நியமனம், பதவி உயர்வு, நிர்வாக மாறுதல், அலகுமாறுதல், பணிநிரவல் ஆகிய வற்றில் எந்த வகை என்பதை உரிய விவரங்களுடன் பதிவுசெய்ய வேண்டும்.
மனமொத்த மற்றும் அலகு விட்டு அலகு மாறுதல் சார்பான விண்ணப்பங்கள், பொது மாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னர் பரிசீலிக்கப்பட வேண்டும்.
உள்மாவட்டத்துக்குள் பணி:
அதேபோல் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வுக்கு விண் ணப்பித்த ஆசிரியர்கள் உள் மாவட்டத்துக்குள் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் ஆணை பெற்ற பின்னர் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது.
விண்ணப்பித்து கலந்தாய்வு நடைபெறும் நாளில் வருகை புரியா மலோ, தாமதமாக வந்தாலோ கலந் தாய்வில் கலந்து கொள்ள இயலாது. மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்க ளின் விண்ணப்பங்களில் தவறுகள் ஏதும் பின்னர் கண்டறி யப்பட்டால் தக்க ஒழுங்கு நடவ டிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Monday, May 13, 2024
Home
தமிழ்நாடு
ஆசிரியர்களுக்கு இட மாறுதல் கலந்தாய்வு சம்பந்தப்பட்ட பள்ளியில் குறைந்தபட்சம் ஓர் ஆண்டு பணியாற்றி இருக்க வேண்டும்: கல்வித்துறை ஆணை
ஆசிரியர்களுக்கு இட மாறுதல் கலந்தாய்வு சம்பந்தப்பட்ட பள்ளியில் குறைந்தபட்சம் ஓர் ஆண்டு பணியாற்றி இருக்க வேண்டும்: கல்வித்துறை ஆணை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment