அமராவதி, மே 11 நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீடு தொடரும் என கர்னூலில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பேசினார். இதுகுறித்து அவர் மேலும் பேசிய தாவது: சந்திரபாபு நாயுடு இரட்டை வேடம் போடு கிறார். ஒருபுறம் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக கூறிவரும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டே, நான் சிறுபான்மையினரின் நண்பன் என்றும் கூறிக்கொள்கிறார்.ஆனால், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவில் 4 சதவீத முஸ்லிம் இட ஒதுக்கீடு தொடரும். 4 நாட்களில் ஆந்திராவில் குருஷேத்திர போர் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் எம்.பி.க் களையும், எம்.எல்.ஏக்களையும் தேர்வு செய்யும் தேர்தல் அல்ல. எதிர்காலத்தை நினைவில் கொண்டு மக்கள் நலத் திட்டங்களை யார் சரியாக செயல்படுத்துவார்களோ அவர்களுக்கு முடிசூடும் தேர்தல். சந்திரபாபு நாயுடுவுக்கு வாக்களித்தால், நல திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது போல் ஆகி விடும்.
இவ்வாறு ஜெகன் மோகன் கூறினார்.
Saturday, May 11, 2024
Home
இந்தியா
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான நான்கு சதவீத இட ஒதுக்கீடு தொடரும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவிப்பு
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான நான்கு சதவீத இட ஒதுக்கீடு தொடரும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment