சென்னை,மே15- சென்னை அய்அய்டியில் இளங்கலை அறிவியல் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் படிப்பிற்கான விண் ணப்ப பதிவு தொடங்கி யுள்ளது.
இதுகுறித்து சென்னை அய்அய்டி வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:
இந்த 4 ஆண்டுகால படிப்பில் அடிப்படை நிலைச் சான்றிதழ், டிப் ளமோ, பிஎஸ் பட்டம் ஆகியவற்றை மாண வர்கள் பெற முடியும். எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் படிப்பானது, தொழில் துறைக்கு தேவையான திறன்களை வழங்குகிறது. இந்தியாவில் மின்னணு மற்றும் உட்பொதிக்கப் பட்ட தயாரிப்புகள் துறையில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளை அதிக அளவில் உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்க மாகும்.
மின்னணு தயாரிப்பு மற்றும் வடிவமைப்புக் கான உலகளாவிய மய்ய மாக இந்தியாவை உரு வாக்க இந்தியா செமிக் கண்டக்டர் மிஷன் திட்டத்துடன் இணைந் துள்ளது.
இந்த படிப்பில் ஆர்வ முள்ள மாணவர்கள்
மே 26ஆம் தேதி வரை https://study.iitm.ac.in/es/என்ற இணைய தளம் மூலமாக விண்ணப் பிக்கலாம்.
இவ்வாறு அதில் குறிப் பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment