பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் சிறந்த பாலிடெக்னிக் கல்லூரி அத்தியாய விருது மற்றும் சிறந்த பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் விருது வழங்கப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 9, 2024

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் சிறந்த பாலிடெக்னிக் கல்லூரி அத்தியாய விருது மற்றும் சிறந்த பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் விருது வழங்கப்பட்டது

featured image

வல்லம், மே 9- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்திய தொழில்நுட்ப கல்விக் கழக சிறந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அத்தியாய விருது(Best ISTE Student Chapter Award 2023) விருது மற்றும் சிறந்த பாலிடெக்னிக் ஆசிரியர் விருது (Best ISTE Polytechnic Teacher Award 2023) வழங்கப்பட்டது.

இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் சிறப்பான செயல்பாடு களான தொழில்நுட்ப நிகழ்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள் நடத்து வதன் மூலம் மாணவ, மாணவியரின் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை உறுதிசெய்யும் இக் கல்லூரியின் சிறப்பான செயல்பாடு களை பாராட்டும் விதமாக, பெரியார் நூற்றாண்டு பாலிடெ க்னிக் கல்லூரிக்கு இந்திய தொழில் நுட்ப கல்வி கழக “சிறந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அத்தியாய விருது – 2023” அறிவிக்கப்பட்டது.

மேலும் மாணவர்களுக்கு தொழில் நுட்பக் கல்வி சேவையை சிறப்பாக ஆற்றிய இக்கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர் பியல் துறையைச் சார்ந்த திருமதி க.ரோஜா, 2023 ஆண்டிற் கான சிறந்த பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் விருதுக்கு தேர்ந் தெடுக்கப்பட்டார்.

4.5.2024 அன்று திருச்செங் கோடு, ரிஷிஸி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற இந்திய தொழில் நுட்ப கல்விக் கழகத்தின் 26ஆவது ஆண்டு வருடாந்திர ஆசிரியர்கள் மாநாட்டில் (தமிழ் நாடு பிரிவு) சிறந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அத்தியாய விருதை புதுடில்லி இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத் தலைவர் டாக்டர் பிரதாப்சிங் காக் கசோ தேசாய் வழங்க இக்கல்லூரி யின் துணை முதல்வர் தி.விஜய லட்சுமி பெற்று கொண்டார்.

மேலும் புதுடில்லி இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத் தலைவர் டாக்டர் பிரதாப்சிங் காக்கசோ தேசாய் சிறந்த பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் விருதை வழங்க இக்கல்லூரியின் மின்ன ணுவியல் மற்றும் தொலைத் தொடர்பியல் துறையைச் சார்ந்த பேராசிரியை க.ரோஜா பெற்றுக் கொண்டார்.
விருதுகளை பெற்ற பேராசிரியர் களை இக்கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

No comments:

Post a Comment