13.11.1948 – குடி அரசிலிருந்து…
கந்தபுராணத்தில் கந்தனும், ராமாயணத்தில் ராமனும் ஆரியத் தலைவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். இரண்டும் தேவர்கள், அசுரர்கள் என்கிற இரு கட்சிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் எழுதப்பட்டுள்ளன. ஆனால், கந்தபுராணத்தில் காட்டுமிராண்டித்தனம் மிக மிக அதிகமாகக் காணப்படுகிறது. பெரும் பெரும் புளுகுகளும் அதில்தான் அதிகம் காணப்படுகின்றன. அதில்தான் வைக்கப் புல்லிலிருந்து பட்டாளங்கள் தோன்றியதாகவும், நெற்றியிலிருந்து மனித உருவம் பெற்ற குழந்தை தோன்றியதாகவும் பகிரண்டப் புளுகுகள் எழுதப்பட்டிருக்கின்றன. கடவுள் பேரால் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று தம் இஷ்டம் போல் எதை எதையோ புளுகிவைத்து விட்டார்கள். பாரதமோ இன்னும் மோசம், ஒருத்திக்கு 5 புருஷர்கள் இருந்ததாக எழுதிவிட்டு, அவளையே பதிவிரதையாகவும் கற்பித்துவிட்டார்கள். அந்த புருஷர்களும் அதாவது பஞ்சபாண்டவர்களும் யார் யாருக்கோ எந்தெந்தவிதமாகவோ பிறந்ததாகத்தான் கதை எழுதப்பட்டிருக்கிறது. அக்கதையில் காணப்படும் குழந்தைகளில் பெரும்பாலான வற்றிற்குத் தகப்பன்மாரைக் கண்டறிவது கஷ்டமாகவே இருக்கிறது. அக்காலத்திய ஆரிய நாகரிகம் அப்படித்தான் இருந்தது போலும்.
Saturday, May 11, 2024
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment