பாணன்
“ஒடிசாவை தமிழர் ஆளலாமா? – இரண்டு குஜராத்திகள் இந்தியாவின் ஒட்டு மொத்த வணிகத்தையும் நிர்வகிக்கிறார்கள் என்று பதிலுக்கு கூறினால் என்ன ஆகும் அமித்ஷா?
ஒடிசா தேர்தல்: ஒடிசாவில் இரண்டு கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றிருக்கும் நிலையில் பா.ஜ.க. சார்பில் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களும் அங்கே தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி வி.கே.பாண்டி யனை விமர்சித்து இருந்தார். அதாவது பூரி ஜெகனாதன் கோவிலின் பொக்கிஷ அறை சாவிகள் காணாமல் போய்விட்டது. ஒடிசாவில் ஊழல்வாதிகள் அதிகரித்து விட்டனர். அந்த சாவி தற்போது தமிழ்நாட்டில் இருப்பதாக பிரதமர் பேசியது பலத்த சர்ச்சையை ஏற்படுத் தியது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் மீண்டும் அய்.ஏ.எஸ். அதிகாரியான வி.கே.பாண்டியனை விமர்சித்துப் பேசி இருக் கிறார். பாஜகவின் மூத்த தலைவரும் ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித் ஷா.
தமிழர் ஆளலாமா?: பிரதமர் நரேந்திர மோடி வி.கே.பாண்டியன் குறித்து பேசும் போது அவரது பெயரை குறிப்பிடாமல் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என பேசி இருந்தார். தற்போது அதே பாணியில் தமிழர் ஒடிசாவை ஆளலாமா? என விமர்சித்திருக்கிறார் அமித்ஷா.
கெண்டுஜார் பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் தற்போது நடக்கவிருக்கும் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல.. இந்த மாநிலத்தின் பெரு மையை பறைசாற்றும் வகையில் இந்த தேர்தல் நடக்கிறது.. பாரம்பரியமிக்க இந்த மாநிலத்தை ஒரு தமிழர் ஆளலாமா மாநில அரசை ஒரு தமிழர் வழிநடத்தலாமா? என்று வாய்க்கு வந்தபடி அரசியல் பேசுகிறார்.
உண்மையில் என்னவென்றால் இந்தியா வில் அனைத்து மாநிலங்களிலும் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆனாலும் அவர்கள் நிர்வாகத்தில் பங்கேற்கலாம்.
மோடியின் தொகுதியான வாரணாசியில் ஆட்சியர் ஒரு தமிழர் என்பதே இதற்கு பெரும் எடுத்துக்காட்டு, மாயாவதி முதலமைச் சராக இருந்தபோது உத்தரப்பிரதேச நிர்வாகத் தில் பெரும்பாலான துறைத் தலைவர்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரி களே இருந்தனர். அவருக்கு பிறகு வந்த அகிலேஷ் யாதவும் தமிழ் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். சாமியார் முதல மைச்சர் பதவி ஏற்ற பிறகு ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் மாற்றினார்.
மகாராட்டிரா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தமிழ் அதிகாரிகள் தங்களின் பணியில் முத்திரை பதித்துள்ளனர். பொதுவாக வட இந்தியர்கள் மலையாளிகள் மற்றும் தமிழர்கள் ஆட்சித்துறையில் கோலோச் சுவதை மறைமுகமாக கேலி செய்வார்கள்.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழ் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் கேரள அதிகாரிகளின் முக்கியத்துவத்தை முடக்கி வைத்தனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் அரசியல் கட்சியில் இருந்து விட்டு பின்னர் ஆளுநர் களாக நியமிக்கப்பட்டனர். இன்றுகூட பா.ஜ.க.வைச் சேர்ந்த இரண்டு தமிழர்கள் வட இந்திய மாநில ஆளுநர்களாக பதவியில் உள்ளனர்.
அமித்ஷாவின் கூற்றுப்படி ஒரு மாநிலத்த வரே முக்கிய பதவியில் இருக்கவேண்டும் என்றால் அனைத்து மாநிலத்திலுமுள்ள துறை முகங்களை அந்த அந்த மாநிலத்தில் துறைமுகத்தை கையாளும் திறமை கொண்ட வர்களிடம் வழங்கலாமே. ஆனால் தமிழ்நாடு முதல் மேற்குவங்கம் தொடங்கி குஜராத் வரை பரந்து விரிந்த இந்திய கடற்கரையில் அமைந்துள்ள சரக்கு கையாளும் துறை முகங்கள் அனைத்தும் அதானி என்ற குஜராத்தி வசம் ஏன்? அதானிக்கு துறைமுகங் களைக் கையாள்வதில் என்ன அனுபவம், விமான நிலையமும் அதுபோல் தானே? கேரள அரசு திருவனந்தபுரம் விமான நிலை யத்தை நாங்களே கையாள்கிறோம் என்று கூறியும் நீதிமன்றத்தின் மூலம் அப்படி எல்லாம் செய்யமுடியாது நாங்கள் தான் அதனை நிர்வாகிக்கும் உரிமையைத் தரு வோம் அதுவும் அதானிக்கு மட்டும் என்று கூறி அதானிக்கு நிர்வாகப் பொறுப்பை ஒப் படைத்தார் மோடி,
அதே போல் ஆந்திரா, ஒடிசா கடற்கரை களில் உள்ள எண்ணெய் வளம் கொண்ட பகுதிகளை அம்பானியின் ரிலையன்ஸ் வசம் அள்ளிக் கொடுத்தாரே, ஏன் ஒடிசாவின் மண்ணின் மைந்தர்களில்; ஒருவருக்கு கூட எண்ணெய் வளத்தை கண்டறிந்து அதனைச் சந்தைப் படுத்தும் அனுபவம் இல்லையா?
ஒடிசா பட்னாயக்கிடம் நட்புறவோடு இருக்கிறோம் என்று கூறிக்கொண்டே ஒடிசா வின் நிலக்கரி மற்றும் பாக்சைட் உள்ளிட்ட கனிம வளம் கொண்ட சுரங்கங்களை வேதாந்தா நிறுவனம் மற்றும் அதானி மைனிங் பிரைவேட் நிறுவனத்திற்கு அள்ளிக் கொடுத் தாரே? அதானி இந்தோனேசியா, மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தரம் குறைந்த நிலக்கரிகளைக் கொண்டுவந்தால், அதனை இந்தியாவில் மாநிலங்களின் கீழ் இயங்கும் அனல் மின் நிலையங்கள் கட்டாயம் வாங்க வேண்டும் என்று வற்புறுத்தியது மோடியின் அரசுதானே? அதானிக்கு நிலக்கரி சுரங்கங் கள் கைமாறிய பிறகு பல்வேறு அரசுத்துறை சுரங்க நிறுவனங்கள் ஒன்றுமில்லாமல் போனது.
இதனால் அந்த அந்த மாநிலங்களில் வேலைவாய்ப்பு இழப்பு, நிதி இழப்பு உள்ளிட்டவைகளை எதிர்கொண்டு இன்று வரை போராடிக் கொண்டு இருக்கின்றனர். எடுத்துக்காட்டாக ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா போன்ற மாநிலங்களில் குறிப்பாக சுரங் கங்களில் இருந்து கிடைக்கும் நிதி வருவாய் கடந்த 6 ஆண்டுகளில் சுழியத்திற்கும் கீழ் வந்துவிட்டது. அவர்கள் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒன்றிய அரசிடம் கையேந்தும் அவலத்திற்கு ஆளானார்களே 2015ஆம் ஆண்டு மோடி தனது ஆஸ்திரேலியப் பய ணத்தின் போது அதானியையும் அழைத்துக் கொண்டு அதானி மைனிங் நிறுவனத்திற்காக ஆஸ்திரேலியாவிற்குச் சென்று மேற்கு ஆஸ் திரேலியாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தை தானே முன்னின்று ஒப்பந்தத்தில் கையெப்ப மிட்டுக் கொடுத்தார். இந்த நிலக்கரிச் சுரங்கத்திற்கு ஆஸ்திரேலியா முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
அந்த நாட்டின் நிதி நிறுவனங்கள் அதானி நிறுவனத் திற்கு நிதி வழங்க மறுத்த போது, அதை எல்லாம் பற்றி கவலைப்படாமல் ஸ்டேட் பாங்க் இந்தியாவின் மூலம் கடன் வாங்கிக் கொடுத்தாரே? அதே போல் அரசியல் குழப்பம் நிகழ்ந்த காலத்தில் கூட சிறிலங்கா சென்று சிறிலங்காவின் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க அதானிக்கு ஒப்பந்தம் வாங்கிகொடுத்தார்.
மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் அதானி, அம்பானிகள் என்ற இரண்டு குஜராத்திகளைத் தவிர அவருக்கு வேறு யாருடையை கண்களும் தெரியவில்லையா?
மகாராட்டிராவில் உள்ள பல தொழில் நிறுவனங்களை குறிப்பாக முகேஷ் அம்பானி யின் சகோதரரான அனில் அம்பானியிடம் தொழில் நுட்ப நிறுவனம் என்ற ஒன்றைத் துவங்கச் சொல்லி அதற்கு ரபேல் விமானத் தின் உதிரிப்பாகம் பொருத்தும் ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொடுத்தார். ஆனால் முன் அனுப வம் எதுவுமே இல்லாத அனில் அம்பானி தனது நிறுவனம் திவாலாகி விட்டதாக அறிவித்துவிட்டார்.
இந்தியாவில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல் நிறுவனம் ஒன்று உலகப் புகழ்பெற்ற நிறுவ னம் என்ற பெயர் எடுத்தது அதற்கும் ரபேல் உதிரிப்பாகங்களை இணைக்கும் பணியைத் தராமல் குஜராத்தி நண்பருக்கு ஏன் கொடுத் தார்கள், ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல் நிறுவனத்தில் பெரும்பாலும் தென்னிந்தியர் களே அதிகம் பணி புரிகின்றனர் என்ற காழ்ப்புணர்ச்சியா?
இந்த நாடு பல்வேறு பாகங்களைக் கொண்டு இயங்கும் எஞ்சின் போன்றது. மாநிலங்களின் பங்களிப்பில் சீராக சென்று கொண்டு இருந்த நாட்டை விரல்விட்டு எண்ணும் அளவிற்கு உள்ள குஜராத்தி தொழிலதிபர்களுக்கு அள்ளிக் கொடுத்ததன் விளைவாக அனைத்துத் துறையிலும் பின்ன டைவு, குறிப்பாக வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு ஏற்றுமதியில் தளர்ச்சி என பல இன்னல்களை இந்த நாடு இன்றளவும் அனுபவித்து வருகிறதே?
இது எல்லாம் மோடி அமித்ஷா கண்களுக் குத் தெரியவில்லையா?
தமிழர்களைத் திட்டினால் வடக்கே ஓட்டு விழும் என்ற குரூர புத்தியால் தான் தமிழ் நாட்டில் முதலாம் கட்டத்திலேயே தேர்தலை நடத்தி முடித்தார் என்பது உண்மையாகி உள்ளது.
இந்தியா என்பது பல்வேறு மாநிலங்கள் என்னும் மலர்கள் அடங்கிய பூச்செண்டு போன்றது. அதுதான் அதற்கு அழகும் அங்கே அனைத்துப் பூக்களும் அழகு தரும் ஒன்றுதான். ஆனால், இந்த பூங்கொத்தை காவி நிறமுடைய பூக்களைக் கொண்டே அலங்கரிப்பேன், அதுவும் தன்னுடைய ஒரு சில தொழிலதிபர்களின் கண்பார்வைக்கு மட்டுமே என்கிறார்கள்.
அவர்கள் ஒடிசாவை ஒரு மாற்றத்துக்கு எல்லாம் இந்தியா – இந்தியர் என்று பார்க்கும் மோடி – அமித்ஷா அன் கம்பெனிகளுக்கு தேர்தல் வந்தால் மட்டுமே தமிழர், மலையாளி, கன்னடர், தெலுங்கர் எல்லாம் ஸநாதன விரோதிகளாகவும் வளர்ச்சிக்கு எதிரானவர் களாகவும் அரசின் பணத்தை நலத்திட்டம் என்ற பெயரில் விரயம் செய்கிற வர்கள் என்று மோடி 17.05.2024 அன்று உத்தரப் பிரதேசத்தில் கூறுகிறார். பின்னர் ஒடிசாவில் தமிழர்கள் திருடர்கள் என்ற பொருள் பட பேசுகிறார். அமித்ஷாவோ ஒருபடி மேலே போய் ஒடிசாவை தமிழர் ஆளலாமா என்று கேட்கிறார்?
No comments:
Post a Comment