சென்னை, மே 13- கடலோர நகரங்களில் உப்பு நிறைந்த கடல் காற்றின் இடைவிடாத தாக்குதலிலிருந்தும் உள்நாட்டில் தொழில்துறை மாசுக்களிலிருந்தும், இந்தியாவில் நிலவும் பலதரப்பட்ட தட்ப வெப்ப நிலை களையும் தாக்குப்பிடிக்கும் உருக்கைத் தயாரிப்பது மிகவும் சவாலானது.
சூர்யதேவ் அலாய்ஸ் மற்றும் பவர் நிறுவனம் எப்.இ. 550டி சி.ஆர்.எஸ். டி.எம்.டி. கம்பிகளை அறிமுகம் செய்துள்ளது. இது துருப்பிடிக்காத தன்மை கொண்டது. சூர்யதேவ் எப்.இ. 550டி சி.ஆர்.எஸ். டி.எம்.டி. கம்பிகள் உயர் தரத்திலான இரும்புத் தாதிலிருந்து தயாரிக்கப் படுகிறது. இதனுடன் சரியான விகிதத்தில் தாமிரம், குரோமியம் மற்றும் நிக்கல் ஆகியவை சேர்க்கப்பட்டு துருப்பிடிக்காத வகையில் உருவாக்கப்படுகிறது.
சூர்யதேவ் நிறுவனம் துருப்பிடித்தலைத் தடுக்கும் முயற்சியில் இடையறாது ஆராய்ச்சி மற்றும் புத்தாக் கத்தை கடைப்பிடிக்கிறது. இதன் வெளிப்படாக வந்துள்ள இந்தக் கம்பிகள், கட்டடத்தின் ஆயுள்காலத்தை நீட்டிப்ப தோடு, சுற்றுச் சூழல் பாதிப்பிலிருந்தும் தாக்குப்பிடிக்கிறது. இதனால் அடிக்கடி பழுது ஏற்படுவது அல்லது மாற்றங்கள் செய்வது குறைகிறது.
சூர்யதேவ் எப்.இ. 550டி சி.ஆர்.எஸ். டி.எம்.டி. கம்பிகள் அனைத்து வகையான தனிமங்களுக்கு எதிரான கவசமாக செயல்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில், பெங்களூர்-சென்னை விரைவுச் சாலை, சென்னை வெளி வட்டச் சாலை மற்றும் சென்னைத் துறைமுகம் – மதுரவாயல் விரைவுச் சாலை போன்ற முக்கிய உள் கட்டமைப்புத் திட்டங் களுக்கு தனது பங்களிப்பின் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் சூர்யதேவ் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதில் பெருமை கொள்கிறது.
இந்நிறுவனத்தின் வெற்றியின் பின்னணியில் மிகவும் வலிமையான விநியோகஸ்தர்கள் ஒருங்கிணைப்பு அதாவது 500 அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் தென்னிந் தியாவில் உள்ளது, இந்நிறுவனத்துக்கு மிகப் பெரிய சொத் தாகும். இவர்களுடன் 2,000 திறன்மிகு பணியாளர்களடங்கிய குழு செயல்படுகிறது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment