கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 11, 2024

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

11.5.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* உபியில் இந்தியா கூட்டணி புயல் வீசுகிறது மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்: ராகுல்காந்தி உறுதி
* மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் பிரிஜ் பூஷன் மீது குற்றச்சாட்டு பதிவு: டில்லி நீதிமன்றம் உத்தரவு
* மூன்று கட்ட தேர்தலுக்குப் பின்னர் பாஜக ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது, மல்லிகார்ஜூனா கார்கே.
* அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பையும் மீறி கெஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
* தெலங்கானா காங்கிரஸ் அரசின் பெண்கள் நலத் திட்டங்கள், நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தேர்தலில் எதிரொலிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* தமிழ்நாடு அரசின் அண்ணல் அம்பேத்கர் வணிக வெற்றியாளர்கள் திட்டத்தின் கீழ், கடந்த ஓராண்டில் 1300 தாழ்த்தப்பட்டோர் புத்தொழில் தொடங்கியுள்ளனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘சர்வாதிகாரத்துக்கு எதிராக 140 கோடி மக்கள் ஒன்றுபட வேண்டும்’: சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் முதல் கருத்து
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* எழுதி வைத்துக்கொள்ளுங்கள், ஜூன் 4 அன்று மோடி இந்தியாவின் பிரதமராக இருக்க மாட்டார். இனிமேல் மோடி இந்தியாவின் பிரதமராக போவதில்லை என்பதற்கு எழுத்துப்பூர்வ உத்தரவாதமாக என்னிடம் இருந்து நீங்கள் எடுத்துக்கொள்ளலாம், உ.பி. தேர்தல் பரப்புரையில் ராகுல் அதிரடிப் பேச்சு.
தி இந்து:
* அதானி-அம்பானி எதிர்க்கட்சிகளுக்கு லஞ்சம் கொடுத்ததால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மவுனம் சாதித்து விட்டார் என்று குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, அதானி, அம்பானி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என காங்கிரஸ் கேள்வி.
தி டெலிகிராப்:
* பிரதமர் மோடியுடன் விவாதத்திற்கு நான் 100 சதவீதம் தயாராக இருக்கிறேன், ஆனால் அவர் வரமாட்டார் என ராகுல் காந்தி பேச்சு.
* வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து, குறைந்த வாக்குப்பதிவு அறிக்கைகள் வந்ததிலிருந்து, பதற்றமடைந்த மோடி, வளர்ச்சி மற்றும் “400-க்கும் மேற்பட்ட இடங்கள்” பற்றிய பேச்சிலிருந்து தனது கவனத்தை வெட்கக்கேடான மத துருவமுனைக்கு மாற்றியுள்ளார் என்கிறார் கட்டுரை யாளர் ஜே.பி.யாதவ்
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பயணிகள் மற்றும் சக ஊழியர்களுடன் சிறப்பாகத் தொடர்பு கொள்வதை உறுதி செய்யும் வகையில், பிற மாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கு, தெற்கு ரயில்வே பேச்சுத் தமிழ் கற்பிக்கத் தொடங்கும்.
– குடந்தை கருணா

No comments:

Post a Comment