பெங்களூரு, மே 28 பாஜகவை சேர்ந்த கருநாடக மேனாள் முதல மைச்சர் எடியூரப்பாமீது 17 வயது சிறுமியான தனது மகளை பாலி யல்வன்கொடுமை செய்தார் என்று புகார் அளித்த பெண் திடீர் என மரணம் அடைந்துள்ளார்.
பாஜக உறுப்பினரான கருநாடக மேனாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது பெங்களூரு சதாசிவநகர் காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. பெங்களூரு நகரில் உள்ள எடியூரப் பாவின் வீட்டுக்கு உதவி கேட்டு சென்றிருந்த போது 17 வயது மகளை வீட்டின் ஒரு அறைக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத் ததாக இளம்பெண்ணின் தாய் புகார் அளித்திருந்தார்.
மக்களவைத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் எடியூரப்பா மீது பதிவான இந்த போக்சோ வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. எடியூரப்பா மீது போக்சோ வழக்கு தொடர்ந்த 54 வயது பெண் மூச்சுத்திணறல் காரணமாக உளி மாவு அருகே பன்னரகட்டா ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் (26.5.2024) இரவு திடீரென்று உயிர் இழந்தார். நுரையீரல் புற்றுநோயால் அந்த பெண் பாதிக்கப்பட்டு இருந்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் மூச்சுத்திணறல் ஏற் பட்டு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாகவும் தனியார் மருத்துவமனை மருத்து வர்கள் தெரிவித்துள்ளனர்.
பாஜகவை சேர்ந்த கருநாடக மேனாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு தொடர காரணமாக இருந்த பெண் உயிர் இழந்திருப்பது குறித்து சதாசிவ நகர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment