அதிசயம் ஆனால் உண்மை! ஆந்திராவில் விடிய விடிய நடந்த வாக்குப்பதிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 15, 2024

அதிசயம் ஆனால் உண்மை! ஆந்திராவில் விடிய விடிய நடந்த வாக்குப்பதிவு

featured image

விசாகப்பட்டினம், மே 15- ஆந்தி ராவில் 175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த 13.5.2024 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடத்தப்பட்டது.

மதியம் வெயில் கொளுத்திய தால் சற்று மந்தமான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மேல் உற்சாகமாக வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்கு வரத் தொடங்கி விட்டனர்.
இதனால் காலையைவிட மாலையில் சில இடங்களில் அதிக மான மக்கள் வாக்களித்தனர்.

சித்தூர், குப்பம், விசாகப்பட்டி னம், குண்டூர், விஜயவாடா மற்றும் கோதாவரி மாவட்டங்களில் உள்ள பல்வேறு வாக்குச் சாவடிக ளில் மக்கள் இரவு நேரத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

இதனால், வாக்குச் சாவடிகளில் விளக்கு, குடிநீர் போன்றவை ஏற் பாடு செய்யப்பட்டது.

விசாகப்பட்டினத்தில் காஜு வாகா எனும் பகுதியில் மழை பெய்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட போதிலும் மக்கள் மெழுகுவத்தியின் உதவியு டன் வாக்களித்தனர்.
பல இடங்களில் நள்ளிரவு 2 மணி வரை வாக்குப்பதிவு நடை பெற்றுள்ளது.

இது குறித்து ஆந்திர மாநில தேர்தல் ஆணையர் முகேஷ் குமார் மீனா கூறுகையில்:

“இம்முறை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள் ளது. சில இடங்களில் அதிகாலை 2 மணி வரை கூட வாக்குப்பதிவு நடந்தது.
இம்முறை ஆந்திராவில் வாக் குப் பதிவு 81 சதவீதத்தையும் தாண்டுமென கருதப்படுகிறது. ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் போட்டியிட்ட பிட்டா புரம் தொகுதியில் 86.87 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன” என்றார்.

No comments:

Post a Comment