பெண்களுக்கு சமஅதிகாரமளிக்கும் இந்தியாவை உருவாக்குவோம் சோனியா காந்தி அழைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 24, 2024

பெண்களுக்கு சமஅதிகாரமளிக்கும் இந்தியாவை உருவாக்குவோம் சோனியா காந்தி அழைப்பு

featured image

புதுடில்லி, மே 24- டில்லியில் நாளை 25.5.2024) 6ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டில்லி மக்கள் அனைவரும் வாக்களிக் குமாறு காங்கிரஸ் மேனாள் தலைவர் சோனியா காந்தி பேசும் காட்சிப்பதிவை பிரியங்கா காந்தி சமூக வலைத்தளப் பதிவில் வெளியிட்டுள்ளார் .
அதில் சோனியா காந்தி,

“என் அன்பான டில்லி மக்களே, இந்த தேர்தல் நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசமைப்பை காப்பாற்றுவதாக இருக்கவேண்டும். வேலை வாய்ப் பின்மை, பணவீக்கம், அரசியல் சாசனம் மீதான தாக்குதல் போன்றவை இந்தத் தேர்தல் மூலம் விலகவேண்டும்.

உங்கள் ஒவ்வொரு வாக்கும் வேலைவாய்ப்பினை உருவாக்கும், பண வீக்கத்தினைக் குறைக்கும், பெண்களுக்கு சமஅதிகாரமளிக்கும் மற்றும் எதிர் காலத்தில் சமத்துவத்தினை உருவாக் கும். டில்லியின் ஏழு தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்ட ணியின் வேட்பாளர்களை பெரும் பான்மையான வாக்குகளுடன் வெற்றி பெறச் செய்யுங்கள். ஜெய் ஹிந்த்!”
-இவ்வாறு சோனியா காந்தி அக்காட்சிப்பதிவில் கூறியுள்ளார்.

6ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் மே மாத இறுதியில் நடைபெற விருப்பதால், தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த 6ஆம் கட்டத் தேர்தலில் மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

டில்லியில் 7 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், அரியானாவில் 10 தொகுதிகள், ஜார்க் கண்டில் 4 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜவுரியில் 3ஆம் கட்டத் தில் ஒத்திவைக்கப்பட்ட வாக்குப்பதிவு உட்பட 58 தொகுதிகளுக்கும் 6ஆம் கட்டத்தின்போது தேர்தல் நடை பெறவுள்ளது.

No comments:

Post a Comment