பிரபஞ்ச வெளியில் உள்ள கோளில் உயிர்கள் இருக்கின்றனவா என்று தேடல் நடந்து கொண்டிருக்கும் சம காலத்தில்கூட நம் சொந்தக் கோளில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் இன்னும் முழுமையாகக் கண்டுபிடிக்கப் படவில்லை என்பதை அறிவீர்களா?
ஆம், உண்மை தான் என்கிறது சமீபத்திய கண்டுபிடிப்பு. தென் அமெ ரிக்க கண்டத்தில் உள்ள நாடு சிலி. மிக நீண்ட கடற்கரையைக் கொண்ட இந்த நாட்டில் தான் இதுவரை அறியப்படாத 100 புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
தி சாலாஸ் ஒய் கோமெஸ் ரிட்ஜ் (The Salas y Gomez Ridge) என்பது சிலி நாட்டின் கடற்கரையை ஒட்டி அமைந் துள்ள மலைத் தொடர். கடலுக்கு அடியில் இருக்கும் இந்த மலைத் தொடர்கள் 2,900 கி.மீ., நீளம் கொண்டவை. டெக்சாஸ் உள்ளிட்ட சில பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 40 நாட்கள் இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண் டனர். அப்போது தான் பல புதிய இனங்களைச் சேர்ந்த மீன்கள், பவளப் பாறைகள், கடற்பஞ்சுகள், நண்டுகள், கடல் அட்டைகள் ஆகியவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரினங் கள் கண்பிடிக்கப் பட்டுள்ளது இதுவே முதல்முறை. இந்த அரிய கண்டுபிடிப்பு கடல் உயிரினங்கள் பற்றிய நம் புரிதலை அதிகப்படுத்தும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
No comments:
Post a Comment