பட்னா, மே 25 தேர்தல் உத்தி வகுப் பாளரான பிரசாந்த் கிஷோருக்கு, பாஜக நிதியுதவி அளிப்பதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், ‘ஜன சுராஜ்’ என்ற கட்சியை நடத்தி வருகிறார். பீகாரில் இவர் ஒரு முக்கிய அரசியல் முகமாக உள்ளார். இது தவிர பல கட்சிகளுக்கான பிரச்சாரங்களை நிர்வகித்து வருகிறார். பிரசாந்த் கிஷோர், முன்பு, நிதிஷ்குமாரின் அய்க்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியில் அவருக்கு அடுத்த இடத்தில் இருந்தார்.
இந்நிலையில், வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில், பாஜக அமோக வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என பிரசாந்த் கிஷோர் கடந்த சில நாள்களாக ஊடகங்களுக்கு பேட்டிகளை கொடுத்து வந்தார். இதற்கிடையே இவர் பாஜக தேசிய செய்தி தொடர் பாளராக நியமிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் போலிப் பதி வுகள் பகிரப்பட்டன. இந்நிலையில் இது காங்கிரஸ் கட்சியின் கைங் கர்யம் என ‘ஜன சுராஜ்’ கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இச்சூழலில் பிரசாந்த் கிஷோர் குறித்து ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள் ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, “எனது மாமா (நிதீஷ் குமார்) கூட அமித் ஷாவின் விருப்பத்தின் பேரில் பிரசாந்த் கிஷோரை, ஜேடியு தேசிய துணைத் தலைவராக்கினேன் என கூறியிருந் தார்.இன்று வரை, அமித் ஷாவோ அல்லது பிரசாந்த் கிஷோரோ அதனை மறுக்கவில்லை. பிரசாந்த் கிஷோர் ஆரம்பம் முதலே பாஜக வில் இருந்து வருகிறார். அவர் எந்த கட்சியில் சேர்ந்தாலும் அந்த கட்சி நாசமாகிவிடும்.
அவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று தெரியவில்லை. அவர் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நபர்களுடன் வேலை செய்கிறார். அவர் உங்கள் தரவை எடுத்து மற்றொன்றைக் கொடுக் கிறார். அவர் வெறும் பாஜக ஏஜென்ட் அல்ல; ஆனால் பாஜக மனம் கொண்டவர். அவர் பாஜக சித்தாந்தத்தைப் பின்பற்றுகிறார். பாஜக தனது வியூகத்தின் ஒரு பகுதி யாக அவருக்கு நிதியுதவி செய்கிறது” என்று அவர் கூறியுள்ளார்
No comments:
Post a Comment