முஸ்லிம் இடஒதுக்கீடு: பா.ஜ.க. பதிவை நீக்க வேண்டும் எக்ஸ் தளத்துக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 9, 2024

முஸ்லிம் இடஒதுக்கீடு: பா.ஜ.க. பதிவை நீக்க வேண்டும் எக்ஸ் தளத்துக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

புதுடில்லி, மே 9– முஸ்லிம் இடஒதுக்கீடு குறித்த சர்ச்சை கருத்து அடங்கிய கேலிசித்திர காட்சிப் பதிவை வெளியிட்ட கருநாடக பாஜகவின் பதிவை உடனடியாக நீக்குமாறு ‘எக்ஸ்’ வலைதளத்தை இந்திய தேர்தல் ஆணையம் 7.5.2024 அன்று அறிவுறுத்தியது.
கருநாடத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ஆம் தேதி வாக் குப்பதிவு நிறைவுற்ற நிலையில், மற்ற 14 தொகுதிகளுக்கு 7.5.2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

முன்னதாக, 3-ஆம் கட்ட தேர் தல் பிரச்சாரம் அனல் பறந்த கட்டத்தில், பழங்குடியினர், தாழ்த் தப்பட்டோர், ஓபிசி பிரிவினரிட மிருந்து இடஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம் சமூகத் தினருக்கு காங்கிரஸ் வழங்குவதாக சித்தரிக் கப்பட்ட காட்சிப் பதிவு ஒன்று கருநாடக பாஜகவின் எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் முஸ்லிம்கள் இடையே பகை மையை ஏற்படுத்தும் இந்தப் பதிவு குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கருநாடக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் புகாரளித்தது. அதன்படி, காட்சிப் பதிவை நீக்க கோரிய கருநாடக தேர்தல் அதிகாரியின் உத்தரவை எக்ஸ் வலைதளம் இன்னும் செயல் படுத்தவில்லை.

இதையடுத்து, எக்ஸ் வலை தளத்துக்கு தேர்தல் ஆணையம் 7.5.2024 அன்று எழுதிய கடிதத் தில், ‘கருநாடக பாஜகவின் குறிப் பிட்ட அந்த சமூக வலைதளப் பதிவு தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்குப் புறம்பானது. இது தொடர்பாக கருநாடக தலைமைத் தேர்தல் அதிகாரி வழக்குப்பதிவு செய்துள்ளார். மேலும், தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளின் படி காட்சிப் பதிவை வலைதளத்தில் இருந்து நீக்குமாறு மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தர விட்டுள்ளார். ஆனால், அந்த உத்தரவு இன்னும் செயல் படுத்தப்படாமல் உள்ளது. எனவே, சர்ச்சை பதிவை எக்ஸ் வலைதளத்திலிருந்து உடனடியாக நீக்க வேண் டும்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment