பிரதமருக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கேள்வி
கொல்கத்தா, மே 13- பாலியல் புகாருக்கு உள்ளான மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என அம்மாநில முதலமைச்சர் மம்தா கேள்வி எழுப்பி உள்ளார். பாரக்பூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட அம்டங்கா கிராமத்தில் தேர்தல் பேரணியின் போது மம்தா பேசியதாவது:
சந்தேஷ்காலி விவகாரத்தில் பிரதமர் இன்னும் பொய்களை மட்டுமே பேசி வருகிறார்.
இந்த விவகாரத்தில் பாஜகவின் சதி இப்போது அம்பலமாகிவிட்டதால் அவர் வெட்கப்பட வேண்டும். 70-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ரூ.2,000 கொடுக்கப்பட்டதை காட்சிப் பதிவு மூலம் உள்ளூர் பாஜக தலைவரே ஒப்புக் கொண் டுள்ளார். மேலும், இந்த சர்ச் சையின் பின்னணியில் சுவேந்து அதிகாரியின் சதி உள்ளதாக கூறப் படுகிறது.
பாலியல் துன்புறுத்தல் குற்றச் சாட்டுக்கு உள்ளான மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராக ஒன்றிய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் மட்டும் அமைதி காக்கிறார். இது, பெண் களுக்கு எதிரான பாஜகவின் உண்மை முகத்தை காட்டுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment