சண்டிகார், மே 15- பா.ஜனதா தன்னை கண்டு பயப்படுவதாக அரியானாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது கெஜ்ரிவால் கூறினார்.
குருஷேத்ராவில் பிரச்சாரம்
டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அம லாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி கைது செய்தது.
அமலாக்கத்துறையின் விசாரணைக்கு பின்னர் அவர் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே தான் கைது செய்யப்பட் டதை எதிர்த்து கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் அவருக்கு இடைக் காலப் பிணை வழங்கி கடந்த 10-ஆம் தேதி உத்தரவிட்டது. கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ஆம் தேதி வரை இடைக்காலப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
சிறையில் இருந்து வெளியே வந்தது முதல் கெஜ்ரிவால், நாடாளுமன்ற தேர்த லில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில் அரியானா மாநிலத்தின் குருஷேத்ரா மக் களவை தொகுதியில் போட்டி யிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் சுசில் குப்தாவை ஆதரித்து கெஜ்ரிவால் நேற்று (14.5.2024) அங்கு பிரச்சாரம் செய்தார்.
என்னை கண்டு பயம்
குருஷேத்ராவின் பெஹோவா நகரில் வாகனத்தில் பேரணியாக சென்று அவர் வாக்கு சேகரித்தார். சாலை யின் இருபுறமும் ஏராளமான மக்கள் திரண்டு நின்று கெஜ்ரிவாலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து பேரணியில் கெஜ்ரிவால் பேசியதாவது:-
மார்ச் 16-ஆம் தேதி நாடா ளுமன்ற தேர்தல் அறிவிக்கப் பட்டது. மார்ச் 21-ஆம் தேதி என்னை சிறைக்கு அனுப்பி னார்கள். இதற்கு அர்த்தம் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய் யக்கூடாது என்று அவர்கள் (பா.ஜனதா) விரும்பினர். அவர்கள் கெஜ்ரிவாலை கண்டு பயப்படுகிறார் கள்.
எனக்கு பெஹோவாவில் உறவுகள் உள்ளன. எப்படி என்று நீங்கள் கேட்பீர்கள். எனது தம்பியும், பஞ்சாப் முதலமைச்சருமான பகவந்த் மானின் மாமியார் பெஹோ வாவை சேர்ந்தவர்.
அவரது (பகவந்த் மான்) மாமனார் இந்தர்ஜீத் சிங் இன்று எங்களுடன் இருக் கிறார். என்னை சிறைக்கு அனுப்பிய பா.ஜனதாவுக்கு இங்கி ருந்து ஒரு வாக்கு கூட போகக்கூடாது.
-இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.
No comments:
Post a Comment