பிஜேபி வேட்பாளரை விரட்டியடித்த பஞ்சாப் விவசாயிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 9, 2024

பிஜேபி வேட்பாளரை விரட்டியடித்த பஞ்சாப் விவசாயிகள்

featured image

சண்டிகர், மே 9- பஞ்சாபில் பா.ஜ.க., வேட்பாளரை நடுரோட்டில் நிற்க வைத்து விவசாயிகள் கேள்வி கேட்டதால் வாக்குச் சேகரிக்க முடியாமல் வந்த வழியே திரும்பி சென்றார்.
பஞ்சாபில் பா.ஜ.க., வேட்பாளரை நடுரோட்டில் நிற்க வைத்து விவசாயிகள் கேள்வி கேட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டதுடன் பா.ஜ.க. வேட்பாளர் பிரச்சாரம் மேற்கொள்ளாமல் திரும்பினார்.
கோரிக்கைகளை நிறைவேற்றாத ஒன்றிய பா.ஜ.க., அரசுக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தொடர்ந்து தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
ஆங்காங்கே போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். டில்லியை நோக்கி முற்று கையிடும் போராட்டமும் தொடர்ந்து வருகிறது. ஆனால் விவசாயிகளை டில்லி செல்ல விடாமல் ஒன்றிய பா.ஜ.க., தடுத்து வருகிறது.
இந்நிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிடும் பா. ஜ.க., வேட்பாளர்கள் பிரச்சா ரத்திற்கு வரும்போது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பா.ஜ.க., வேட்பாளர்களுக்கு எதிராக விவ சாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க., வேட்பாளர் தினேஷின் சிங் பாபு தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோது, அவரை வழிமறித்த விவசாயிகள், குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்காத பா.ஜ.க.,வுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பி முழக்கமிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பிரச்சாரம் செய்ய முடியாமல் பா.ஜ.க., வேட்பாளர் திரும்பி சென்றார். இந்த நிகழ்வால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment