உடலுக்கு பலம் கொடுக்கும் ஆரஞ்சுப்பழம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 27, 2024

உடலுக்கு பலம் கொடுக்கும் ஆரஞ்சுப்பழம்

featured image

ஆரஞ்சுப்பழம் மஞ்சளும், சிவப்பும் கலந்த நிறத்தில் அமைந்திருக்கும். இதனுடைய வடிவம் பந்துபோல இருந்தாலும் மேல் பக்கமும், கீழ் பக்கமும் சிறிதளவு தட்டையாக இருக்கும். தோலுக்கும், சுளைக்கும் ஒட்டுதல் இருக்காது. தோலை உரித்தவுடன் சுளையையும் சுலபமாகப் பிரித்து எடுத்துவிடலாம். இதன் ருசி தனிப்பட்ட ருசியாகும். மிகவும் இனிப்பாகவும், புளிப்புச் சுவையைக் கொண்டிருக்கும் இந்த கமலாப்பழத்தில் எண்ணற்ற பலன்கள் உள்ளன.

* ஆரஞ்சுப்பழத்தில் வைட்டமின் ஏ, பி, பி1, பி2, சி போன்ற சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் உள்ளன.
இதனை உட்கொள்வதால், ரத்தம் ஏராளமாக உடலில் ஊறும், உடல் பலம் பெறும். வைட்டமின்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு நல்லது.

* உடல் பலகீனமாக இருப்பவர்கள் ஆரஞ்சுப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் புத்துணர்வு பெற்று நல்ல பலம் பெறுவார்கள். இது ஒரு சிறந்த இயற்கை டானிக் ஆகும்.

* தூக்கமின்றி தவிப்பவர்கள் அரை டம்ளர் ஆரஞ்சுப்பழச்சாற்றில் ஒரு தேக்கரண்டியளவு தேனை விட்டுக் கலக்கிச் சாப்பிட்டால் போதும். ஆழ்ந்த தூக்கம் அவர்களை அரவணைக்கும்.

No comments:

Post a Comment