காங்கிரஸ் தலைவர் கார்கே எச்சரிக்கை
புதுடில்லி,மே 14- பிரதமர் நரேந்திர மோடி 3-ஆவது முறையாக ஆட்சிக்கு வந்தால் எதிர்காலத்தில் தேர்தலே இருக்காது என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எச்சரிக்கை செய்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியில் நேற்று (13.5.2024) நடைபெற்ற இந்தியா கூட்டணி பிரச்சாரக் கூட்டத் தில் கார்கே பேசியதாவது:
பா.ஜ.க. கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது. பா.ஜ.க.வுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி கொடுத்தவர்களுக்கு, வியாபாரம், தொழிலை வழங் கியதன் மூலம்அவர்களை மேலும் பணக்காரர்களாக்கி யுள்ளார் பிரதமர் மோடி.
நாட்டில் ஜனநாயகத்துக்கும், அரசமைப்புச் சட்டத்துக்கும் அச்சுறுத்தல் வந்துவிட்டது. பிரதமர் மோடி 3-ஆவது முறையாக பதவியேற்றால் எதிர்காலத்தில் தேர்தல் என்ற ஒன்றே இருக்காது. தேர்தலை ஒழித்து விடுவார்கள்.
ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரனை கைதுசெய்யும் தைரியம் பிரதமர் மோடிக்கு இருக்கிறது. அதேபோல் தொழிலதிபர்கள் அதானியையும், அம்பானி யையும் ஏன் கைது செய்யவில்லை? இந்தியா கூட்டணிகட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக பாஜக அரசு கைது செய்து வருகிறது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் விடுவிக்கப்படுவர்.
-இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment