பெங்களூரு, மே 25- தி.மு.க. வுடனான கூட்டணி எந்த பிரச் சினையும் இல்லாமல் தொடரும் என்று மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
பா.ஜனதா ஆட்சியில் மக்கள் ஏமாற்றமும், விரக்தியும் அடைந்துள்ளனர். குறிப்பாக விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டத் தால் மக்கள் விரக்தி அடைந்துள் ளனர். அதுமட்டுமின்றி நாட் டில் ஜனநாயகத்தின்மீதும், அரசமைப்பு மீதும் தாக்குதல் நடந்துள்ளது. பா.ஜனதா, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன் படுத்தி ஆட்சி நிர்வாகத்தை நடத்துகிறது.இதனால் மக்கள் வருத்தம் அடைந்து, இந்தியா கூட்டணியை ஆதரித்துள்ளனர்.
அதனால் இந்தியா கூட்ட ணிக்கு தற்போது நல்லவாய்ப்பு அமைந்துள்ளது. இந்தியா கூட்டணி, பா.ஜனதா கூட்டணி ஆட்சிக்கு வருவதை தடுக்கும் வகையில் பெரும்பான்மை பலத்தை பெறும். தேர்தல் முடி வுகள் வந்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும்.
இந்தியா கூட்டணி எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் என்று என்னால் கூற முடியாது. ஏனெனில் அரசியலில் அது போன்ற கணக்குகள் சரியாக அமையாது. அனைத்து மாநிலங் களிலும் பா.ஜனதா தனது இடங்களை இழந்து வருகிறது. அப்படி இருக்க பிரதமர் மோடி மட்டும் பா.ஜனதா கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி
பெறும் என்று சொல்வது எப்படி?..
கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தெலங்கானாவில் வெறும் 2 இடங்களை மட்டுமே கைப் பற்றினோம். ஆனால், தற்போது அங்கு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளோம்.அதனால் தெலங்கானாவில் இந்த முறை காங்கிரஸ் அதிக தொகுதிகளை கைப்பற்றும். தி.மு.க.வுடனான கூட்டணி அப்படியே எந்தவித பிரச்சினையும் இல்லாமல் தொடரும். கேரளா, மராட்டியத் திலும் இந்தியா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்.
ராஜஸ்தானில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடா ளுமன்ற தேர்தலில் ஓர் இடத் தைக்கூட கைப்பற்றவில்லை. ஆனால், தற்போது அங்கு 7 முதல் 8 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும். அதுபோல் மத்திய பிரதேசத்தில் 2 தொகுதிகளில் வெற்றிபெறுவோம். இந்தியா கூட்டணி நாட்டில் அதிக இடங்களை கைப்பற்றும் என்று நம்பத்தகுந்த தகவல்கள் வந் துள்ளது.
-இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
No comments:
Post a Comment