அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 15, 2024

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

featured image

சென்னை,மே15-அரசு உதவி பெறும் பள்ளி களில் 2019 ஏப். 9ஆம் தேதிக்கு முன்பு நிர்வா கத்தால் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர் நிய மனங்களை தகுதி இருந் தால் ஏற்று ஒப்புதல் அளிக்க வேண்டுமென, அதற்கான நெறிமுறை களை வழங்கி பள்ளிக் கல்வித் துறை செயலா ளர் மாவட்ட கல்வி அதி காரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை யின் நிதி உதவி பெற்று தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் பள் ளிகள் இயங்கி வருகின் றன.
இந்தப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் பணிபுரிபவர் களுக்கான ஊதியம் அர சால் வழங்கப்பட்டு வரு கிறது.
ஆசிரியர் பணியிடங் களை நிதியுதவி பெறும் பள்ளியின் நிர்வாகம் நிய மனம் செய்து கொள்ளும். அந்த நியமனங்களை தகு தியின் அடிப்படையில் ஆய்வு செய்து பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கும்.

ஆசிரியர் தகுதி தேர்வு 2019-ஆம் ஆண்டு அறி முகம் செய்யப்பட்ட பின் னர், ஆசிரியர் பணியிடங் களுக்கு ஒப்புதல், பதவி உயர்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள் ளன.
இது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை அரசு செயலாளர் குமர குருபரன் அனைத்து மாவட்ட கல்வி அலுவ லர்களுக்கு அனுப்பி யுள்ள சுற்றறிக்கை:
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் நிய மனம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பாணை வழங்கி உள்ளது. அதில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்காற்றும் சட்டம், 2018-க்குரிய விதிகள் வகுத்தளிக்கப் பட்டு நடைமுறைப்படுத் தப்படும் வரையில் உபரி ஆசிரியர்களை பணிநிர வல் செய்வது குறித்தும், பள்ளி நிர்வாகத்தால் பணியாளர் நிர்ணயம் செய்தல் குறித்தும் விரி வான வழிகாட்டு நெறி முறைகளை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் ஆசிரி யர்கள் நியமனத்துக்கு அனுமதி வழங்கப்படு கிறது.
சென்னை உயர்நீதி மன்றம் இடைக்காலத் தீர்ப்பாணை வழங்கிய 9.4.2019-க்கு முன்னர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மேற்கொள் ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை வழிகாட்டுதல் நெறி முறைகளுக்குட்பட்டு நியமிக்கலாம்.

9.4.2019-க்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்களுக்கு ஏற்பளிப்பு வழங்க பரி சீலிக்கும்போது, பணி நியமனம் தொடர்பான கோப்புகளை முழுமை யாக முதன்மைக் கல்வி அலுவலர் கூர்ந்தாய்வு செய்ய வேண்டும். காலிப் பணியிடம் ஏற்பட்ட நாள், அந்நாளில் அந்தப் பணியிடம் வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ளது போன்று நிரப்ப தகுந்த காலிப்பணியிடமா? என்பதனை உறுதிப்படுத்துவதுடன், ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து கல்விச் சான் றுகளையும் ஒருங்கே பரிசீலித்து தகுதியுள்ள நேர்வுக ளுக்கு மட் டும் ஏற்பளிப்பு ஆணையை வழங்கி, அதன் விவரத்தை எமிஸ் தளத் தில் பதிவேற்றம் செய்ய வேண் டும் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment