சுயமரியாதை இயக்க - ‘குடிஅரசு' இதழ் நூற்றாண்டு விழா வடசென்னை புளியந்தோப்பில் துணைத் தலைவர் சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 9, 2024

சுயமரியாதை இயக்க - ‘குடிஅரசு' இதழ் நூற்றாண்டு விழா வடசென்னை புளியந்தோப்பில் துணைத் தலைவர் சிறப்புரை

featured image

சென்னை, மே 9 சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ இதழின் நூற் றாண்டு விழா சிறப்புப் பிரச்சாரக் கழகக் கூட்டம், வட சென்னை மாவட்டக் கழகம் சார்பில் 4.5.2024 அன்று மாலை 6.30 மணிக்கு புளியந்தோப்பு மோதிலால் தெருவில் சிறப்பாக நடைபெற்றது.

வடசென்னை மாவட்ட தலைவர் வழக் குரைஞர் தளபதி பாண்டியன் அனைவரையும் வரவேற்றும், சுயமரி யாதை இயக்கப் பணி களின் விளைவாக மக்களிடையே ஏற்பட்ட எழுச்சி பற்றியும் விளக்கமாகப் பேசினார்.
இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் தலைமை வகித்தார். பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மாநில இளைஞரணித் துணைச் செய லாளர் சோ.சுரேசு, மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், பொதுக் குழு உறுப்பினர் தி.செ.கணேசன், அமைப்பாளர் சி.பாசுகர், தங்க.தனலட்சுமி, மு.பவானி, க.கலை மணி, அயன்புரம் கழகத் தலைவர் சு.துரைராசு, செம்பியம் கழகத் தலைவர் ப.கோபாலகிருஷ்ணன், கொளத்தூர் இராசேந் திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக செயலவைத் தலைவர் வழக் குரைஞர் ஆ.வீரமர்த்தினி, துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன் பக்கனி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் மத்திய சென்னை மேலிடப் பொறுப் பாளர் இரா.செல்வம் ஆகியோர் சுய மரியாதை இயக்கம் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக நடத்திய சமூகப் புரட்சிப் பணி களையும், பச்சை அட்டை ஏடான ‘குடிஅரசு’ இதழ் மக்களிடையே வேக மாகச் சென்று பார்ப்பன ஆதிக்கப் புரியினருக்கு பெரும் சவாலாக அமைந் ததையும், அந்த அடிப்படையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொய் வின்றித் பணிகளைத் தொடருவதையும் விளக்கமாகப் பேசினர்.
நிறைவாக கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை ஆற் றினார்.
அவர் தமது உரையில், “திராவிட இயக் கத்தின் மாட்சியைப் பறைசாற்றும் வகையில், சுயமரியாதை இயக்க நூற் றாண்டு, ‘குடிஅரசு’ இதழின் நூற்றாண்டு என்பனவற்றோடு பல நூற்றாண்டு விழாக் களை உடையதாக தனிச் சிறப்போடு இந்த ஆண்டு உள்ளது” என்றார்.

‘‘இந்தியாவிலேயே தமிழ்நாடு அனைத்துக் கல்வி நிலையிலும் முன் னணியில் இருப்பதற்குத் தந்தை பெரி யாரிடம் பயின்றவர்கள் இந்த நாட்டில் முதலமைச்சராகப் பதவி வகித்தது – முக்கியமான காரணமாகும்” என்றார்.
மேலும், சுயமரியாதை இயக்கத்தின் அடிப் படைக் கொள்கைகளில் ஒன்றான சமூக நீதி இடஒதுக்கீட்டுக் கொள்கையை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வலியுறுத்துவதையும், தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அரிய முயற்சியினால் சட்டப் பாதுகாப்பு உள் ளதையும், உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளிலும் தந்தை பெரியாரது கொள் கையின் தேவையை, அவசியத்தையும் உணர்ந்து வருகின்றமைக்கு ஆதாரத் துடன் கூடிய தகவல்களையும் விளக் கினார்.

கழகத் துணைத் தலைவருக்கு, வட சென்னை மாவட்டக் கழகம் சார்பாக பசும் பொன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மாவட்டச் செயலாளர் ஆர்.செந்தமிழ்ச் செல்வி ஆகியோர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.
கூட்டத்தில் தலைமைக் கழக அமைப் பாளர் தே.செ.கோபால், கொடுங்கையூர் கழக தலைவர் கோ.தங்கமணி, பெரம்பூர் பகுதி கழகத் தலைவர் மங்களபுரம் ஆ.பாஸ்கர், கண்ணதாசன் நகர் கழக அமைப்பாளர் க.துரை, க.செல்லப்பன், அருள், இரா.யுகேஷ், அண்ணா.மாதவன், கே.எஸ்.மகேஷ்வரன், த.யோகராஜன், ஏ.விஜயகுமார், மாலதி மற்றும் கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.
மாவட்ட தி.மு.க. பிரதிநிதி டி.கே.விஜய ராஜ், வி.சி.க.வைச் சேர்ந்த வி.ஜெ.ஆதித்தமிழன், பூங்கா வீ.அருள் ஆகி யோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நிறைவாக கி.இராமலிங்கம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment