நரேந்திர தபோல்கர் கொலை வழக்கின் மீதான தீர்ப்பு முழுமையானதுமல்ல, திருப்தியளிக்கக் கூடியதுமல்ல! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 24, 2024

நரேந்திர தபோல்கர் கொலை வழக்கின் மீதான தீர்ப்பு முழுமையானதுமல்ல, திருப்தியளிக்கக் கூடியதுமல்ல!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

மும்பை, மே 24- மூடநம்பிக்கை களுக்கு எதிராகப் போராடிய டாக் டர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கின் மீதான தீர்ப்பு முழுமை யானதுமல்ல, திருப்தியளிக்கக்கூடிய துமல்ல என்று மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் மகாராட்டிர மாநிலக் குழு அண் மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட் டிருப்பதாவது:
மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடி வந்த டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்கள், சச்சின் அண்டுரே மற்றும் சரத் கலாஸ்கர் என்பவர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், இவ்விரு வருக்கும் ஆயுள் தண்டனை அளித்து, 10.5.2024 அன்று புனே யில் உள்ள சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பை பாராட்டும் அதே சமயத்தில்,
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டிருந்த இதர நபர்களான வீரேந்திர தவடே, வழக்குரைஞர் சஞ்சீவ் புனலேகர், விக்ரம் பாவே ஆகியவர்கள் மீதான குற்றச் சாட்டுகளை மெய்ப்பித்துத் தண்டனை பெற்றுத் தரக்கூடிய விதத்தில் நீதிமன்றத்தை ஏற்கச் செய்வதற்கு அரசுத் தரப்பு தவறிவிட்டதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தன்னுடைய வேதனை யையும், அதிருப்தியையும் வெளிப்படுத்திக் கொள்கிறது.
இதன் காரணமாக மேற்படி மூவரும் விடுதலை செய்யப்பட்டி ருக்கிறார்கள்.

மூளையாகச் செயல்பட்டவர்களை கைது செய்வதில் சிபிஅய் தோல்வி
தண்டனை பெற்றவர்களும், போதுமான சாட்சியம் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டவர் களும் ஸநாதன் ஸன்ஸ்தா என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்த வழக்கு தொடர்பாக ஆரம்பத்தில் மகாராட்டிர காவல்துறையும், பின்னர் மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகமும் (சிபிஅய்), இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு கடந்த பத்தாண்டு காலமாக இவ் வழக்கின் விசாரணையை இழுத் தடித்து, இறுதியாக கொடூரமான முறையில் இக்குற்றத்தைச் செய்த கொலைபாதகர்களின் மூளையாக இருந்து செயல்பட்டவர்களைக் கைது செய்வதில் பரிதாபகரமான முறையில் தோல்வி அடைந்துள்ளன.
கருநாடக மாநிலத்தில் புகழ் பெற்ற இதழாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கையும், அறிஞர் டாக்டர் எம்.எம். கல்புர்கி கொலை செய்யப்பட்ட வழக்கையும் விசாரணை செய்த காவல்துறையினர்தான் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் களையும் முத லில் கண்டுபிடித்தார்கள் என்பது இங்கே நினைவு கூரத்தக்க தாகும்.

கருநாடக காவல்துறை துல்லிய ஆதாரங்கள் தந்தும்…
கருநாடகக் காவல்துறையினர் மேற் கொண்ட விசாரணையிலிருந்து இந்து ராஷ்ட்டிரத்தை அமைப்பதற்காக, அதற்கு எதிராகச் செயல்பட்டுவரும் அறிவு ஜீவி களையும், செயற்பாட்டாளர்களை யும் கொல்வதற்காக ஒரு பயங்கர வாதக் கும்பல் ஸநாதன் ஸன்ஸ்தா என்ற பெயரில் மகாராட்டிர மாநி லத்தில் செயல்பட்டு வந்ததை, மகா ராட்டிர காவல்துறைக்கும், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு துல்லிய ஆதாரங்களை கருநாடகக் காவல்துறை, மகா ராட்டிர காவல்துறைக்கும், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்திற்கும் அளித்த போதிலும், நரேந்திர தபோல்கர் மற்றும் தோழர் கோவிந்த் பன்சாரே கொலை செய் யப்பட்ட வழக்குகளை விசாரணை செய்த காவல்துறையினர் இத்தகைய தேச விரோத சதிவேலையின் முக்கிய நபர்களைக் கண்டுபிடித்து வழக்குடன் பிணைத்திட வக்கற்று, வகையற்று பரிதாபகரமான முறை யில் தோல்வி அடைந்துள்ளது. ஸநாதன் ஸன்ஸ்தா மற்றும் அதன் பின் உள்ள சக்திகளுக்கு அரசு நிர் வாகம் வளைந்து கொடுத்துள்ளதா என்றே எவரொரு வரும் ஊகிக்கும் நிலை ஏற்பட்டி ருக்கிறது.

ஒன்றிய, மகாராட்டிர அரசுகள்மீது வலுக்கும் சந்தேகங்கள்
முழுமையற்ற நீதியின் காரண மாக, ஒன்றிய அரசாங்கம் மற்றும் மகா ராட்டிர மாநில அரசாங்கத்தின் மீது எழுந்துள்ள சந்தேக மேகங்கள் கலைந் திடாமல் மேலும் அடர்த்தி யாகியுள்ளன. மகாராட்டிராவிலும், கருநாடகா விலும் தொடர்ச்சியாகக் கொலைகளைச் செய்தவர்கள், இவ்வழக்குகளை விசாரணை செய்த புலன் விசாரணை அதிகாரிகளால் திருப்திகரமான முறையில் அடை யாளம் காணப்பட்டு, வழக்குகள் தொடுக்கப்பட்டதாகக் கூறு வதற்கில்லை.
இந்தப் பயங்கரவாதக் குற்றங் களைச் செய்வதற்கு இதன் பின்னணியில் இருந்து இதற்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் களைக் கைது செய்து, விசாரணைக் கூண்டில் ஏற்றும் வரைக்கும் இவ்வழக்கில் புலன் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.

புலன்விசாரணை அதிகாரிகளின் கையாலாகாத்தனம்
இவ்வழக்கை விசாரணை செய்த புலன் விசாரணை அதிகாரிகளின் கையாலாகாத்தனம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் ஆழ்ந்த அதிருப்தியை வெளிப் படுத்திக் கொள்கிறது. முழுமையற்ற இந்தத் தீர்ப்புக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் உரிய ஆர்வத் துடன் மேல்முறையீடு செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள் கிறது. இன்னமும் தீர்வு காணப்படாத கோவிந்த் பன்சாரே கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் அனை வரையும் கண்டுபிடித்து, அவர் களை நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர, உண்மையுடன் உழைத்திட வேண் டும் என்று அவ் வழக்கை விசாரித்து வரும் புலன் விசாரணை அதி காரிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

No comments:

Post a Comment