வருண் காந்திக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்? : மேனகா காந்தி பதில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 12, 2024

வருண் காந்திக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்? : மேனகா காந்தி பதில்

புதுடில்லி, மே 12 2019 மக்களவைத் தேர்தலில் மேனகா காந்தி, உத்தரப்பிரதேசத்தின் சுல்தான்பூர் மக்களவைத் தொகு தியில் இருந்து உறுப் பினரானார். பாரதிய ஜனதா கட்சி அவரை மீண்டும் இதே தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியுள் ளது.
ஆனால் மேனகா காந்தியின் மகனும் பிலிபிட் தொகுதி உறுப் பினருமான வருண் காந்திக்கு இம்முறை அக்கட்சி சீட்டு கொடுக்கவில்லை. வருண்காந்தி ஒரு திறமையான நபர் என்றும் அவர் தனது திறனை சரியாக பயன்படுத்திக் கொண்டால் வெகு தூரம் முன்னேறிச்செல்வார் என்றும் மேனகா காந்தி கூறி னார். “வருண் காந்திக்கு சீட்டு கிடைக்காதது எனக்கு வருத்தம் அளித்தது, ஆனால் தேர்தல் என்றால் அப்படி தான்.

வருண் 28 வயதில் முதன் முறையாக நாடாளுமன்ற உறுப் பினரானார்.. அதன் பின்னர் கோடிக்கணக்கான மக்களின் மனதை வென்றுள்ளார்.” “அரசி யல் தவிர வேறு பல விஷ யங்களிலும் அவருக்கு திறமை உள்ளது. பொருளாதாரம் குறித்த இரண்டு புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். அவர் கவி தையும் எழுதுவார். அவர் இன் னும் பல உயரங்களை அடை வார்” என்று மேனகா குறிப் பிட்டார்.

வருண் காந்தி அடிக்கடி சமூக வலைதளங்களில் பல விடயங்களில் தனது கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார். பலமுறை அவர் தனது சொந்தக் கட்சி மற்றும் பெயர் குறிப்பிடாமல் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோர் குறித்தும் கருத்துகள் வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடி யின் பிறந்தநாளன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட சிவிங்கிப்புலிகள் இறக்கத் தொடங்கியபோது, அது குறித்து பேசிய வருண் காந்தி, “அயல்நாட்டு விலங்குகள் மீதான இந்த பொறுப்பற்ற நாட்டம் உடனடியாக நிறுத் தப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

வருண் காந்திக்கும், பாஜக வுக்கும் இடையிலான உறவு குறித்து மேனகா காந்தியிடம் கேட்டபோது, ​​“வருண் என்ன எழுதினாலும், எதைப் படித் தாலும் அது மக்கள் பிரச் சினைகள் தொடர்பானதாகத் தான் இருக்கும்” என்றார். வருண் காந்தியை சந்திக்கும் போது அரசியலைத் தவிர்த்துவிட்டு, குடும்பம் மற்றும் தனது பேத்தி பற்றி பேசுவதாக மேனகா காந்தி கூறுகிறார்.
கை விட்ட பாஜக : மேனகா காந்திக்கு சுல்தான் பூர் தொகுதி ஒதுக்கிய போதிலும் பாஜக வினர் அவருக்காக பரப்புரை செய்ய முன்வரவில்லை. பெரும் பாலான பரப்புரைகளை தானே தனியாக தனது நண்பர் களுடனே மேற்கொள்கிறார். சொற்மான பாஜகவினரைத் தான் அங்கு பார்க்க முடிந்தது, மேலும் எந்த ஒருபாஜக அரசியல் தலைவர் களும் இதுவரை மேனகா காந்திக்கு ஆதரவாக பரப்புரை செய்ய முன்வரவில்லை.

No comments:

Post a Comment