தேர்தல் ஆணையம் யாருக்கு உபதேசம்? உயர்மட்ட தலைவர்கள் பிரச்சாரத்தில் நல்ல முன் உதாரணமாக இருக்க வேண்டும் தேர்தல் ஆணையம் அறிவுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 15, 2024

தேர்தல் ஆணையம் யாருக்கு உபதேசம்? உயர்மட்ட தலைவர்கள் பிரச்சாரத்தில் நல்ல முன் உதாரணமாக இருக்க வேண்டும் தேர்தல் ஆணையம் அறிவுரை

புதுடில்லி, மே.15- அரசியல் கட்சிகளின் உயர்மட்ட தலை வர்கள், பிரச்சாரத்தில் நல்ல முன் னுதாரணமாக இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுரை கூறி யுள்ளது.

புகார்கள் முடித்து வைப்பு
தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கம் தொடர்பாக தேர் தல் ஆணையம் நேற்று (14.5.2024) ஒரு அறிக்கை வெளியிட்டது. இது, தேர்தல் தேதி அறிவிக்கப் பட்ட பிறகு, தேர்தல் ஆணையம் வெளியிட்ட 2-ஆவது அறிக்கை ஆகும்.
அதில் தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது:-
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து சுமார் 2 மாதங்கள் ஆகிவிட்டன.
பல்வேறு அரசியல் கட்சி களின் பிரச்சாரமும், தொகுதி மட்டத்தில் வேட்பாளர் களின் பிரச்சாரமும் பெரும் பாலும் வன்முறையின்றி, குறைவான கூச்சல் – குழப் பத்துடனும், குறைவான ஒழுங்கீனத்துடனும் நடந்துள்ளது.
தேர்தல் ஆணையத்துக்கு வந்த புகார்களில் 90 சதவீதத்தை முடித்து வைத்து விட்டோம். பா.ஜனதா, காங்கிரஸ் அளித்த சில புகார்களை தவிர வேறு பெரிய புகார்கள் எதுவும் நிலு வையில் இல்லை.

முன்னுதாரணம்
இந்த பின்னணியில், பிரச் சாரத்தில் அரசியல் கட்சிகளின் உயர்மட்ட தலைவர்கள் நல்ல முன்னுதாரணத்தை உருவாக்க வேண்டும். அவர்களிடம் எதிர் பார்க்கப்படுவதற்கு ஏற்ப அவர்கள் நடந்து கொள்ள வேண்டும்.
மீதியுள்ள 3 கட்ட தேர்தல் களில் தங்கள் தேர்தல் பிரச்சார உரைகளை சரிசெய்து கொள் வது அவர்களது முக்கிய கடமை. அதன்மூலம் நாட்டின் சமூக கட்டமைப்பில் நிரந்தர கறை ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.
-இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment