புதுடில்லி, மே 12 எதிர்க்கட்சி தலை வர்கள் தேர்தல் ஆணையரை சந்தித்து பிரதமர் மோடி மீது புகார் அளித்துள் ளனர். தொடர்ந்து சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேசுவது, மக்களவைத் தேர்தல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரதமர் மோடி அளவுக்கு வேறு எந்த பிரதமரும் இவ்வளவு தரம் தாழ்ந்து வெறுப்புப் பேச்சை உமிழ்ந்ததில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர் சித்துள்ளனர்
பிரதமர் மோடி ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ‘நாட்டின் செல்வத்தில் முஸ்லிம்களுக் குத்தான் முதல் அதிகாரம் உண்டு’ என்று சொன்னார்கள். தேசத்தின் செல்வத்தை ஊடுருவல்காரர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றவர் களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்’ என்பது தான் அதன் பொருள். நீங்கள் கஷ்டப் பட்டுச் சம்பாதித்த பணத்தை ஊடு ருவல்காரர்களுக்குத் தரப்போகி றீர்களா?”
பெண்கள் வைத்திருக்கும் தங் கத்தைக் கணக்கிட்டு, அதைப் பங்கிட் டுக் கொடுப்போம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை, என் தாய் மார்கள், சகோதரிகளின் தாலியைக் கூட விட்டுவைக்காது’’ என்று பேசி னார். பிரதமர் மோடி சொல்வதைப் போல, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இப்படியான எந்தவொரு கருத்தும் இடம்பெறவில்லை. எனவே, எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பிரதமர் மோடியின் பேச்சை கண்டித்து வரு கிறார்கள். நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணை யரை எதிர்க்கட்சிதலைவர்கள் சந்தித் தனர். அப்போது “சமூகத்தின் அமை தியைச் சீர்குலைக்கும் வகையிலும், நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் விதத்திலும் பிரதமர் மோடி பேசி வருகிறார். பிரதமர் மோடி இவ்வாறு பேசுவது தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கு எதிராகும். ஆகவே மோடிமீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று எதிர்க்கட்சி தலைவர்கள் வலி யுறுத்தி உள்ளனர்.
No comments:
Post a Comment