சண்டிகர், மே 10 அரியானாவில் முதலமைச்சர் நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில், சட்டப்பேரவையில் நம் பிக்கை வாக்கு கோர உத்தரவிட வேண்டும் என்று அம்மாநில மேனாள் துணை முதலமைச்சரும் ஜேஜேபி தலைவருமான துஷ்யந்த் சவுதாலா ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு துஷ்யந்த் சவுதாலா எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது: பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவினை 3 சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் திரும்பப் பெற்றதால் ஆளும் பாஜக அரசு சட்டப் பேரவையில் பெரும்பான்மையை இழந்துவிட்டது. இந்நிலையில், தனது பெரும்பான்மையை பாஜக அரசு சட்டப்பேரவையில் நிரூபிக்க உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சம்மந்தப்பட்ட அதிகாரி களுக்கு உத்தரவிடும்படி வலியுறுத்து கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டது
இதையடுத்து துஷ்யந்த் சவுதாலா தனது எக்ஸ் பக்கத்தில் எழுதிய பதிவு:
அரியானாவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட பாஜக அரசு, ஒரு பாஜக சட்டமன்ற உறுப்பினரும் ஒரு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினரும் பதவி விலகியதால் பெரும்பான்மையை இழந்துள்ளது. மேலும் 3 சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவினை திரும்பப் பெறுவதாக ஆளுநருக்குக் கடிதம் அளித்துள்ளனர். ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப் பட்டால், ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) நிச்சயம் ஆதரவு தெரி விக்கும் என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. நாங்களும் ஆளுநருக்கு இது பற்றி கடிதம் எழுதியுள்ளோம். தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திட காங்கிரஸ் அழுத்தம் கொடுக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. இதில் பெரும்பான்மை இல்லாதபட்சத்தில் உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு உத்தர விடவும் ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அரியானா சட்டப்பேரவை மொத்தம் 90 உறுப்பினர்களைக் கொண்டது. ஆனால், தற்போது 88 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். சட்டப்பேரவையின் பெரும்பான்மை பலம் 45 என்ற நிலையில் முன்னதாக பாஜக வசம் 46 சட்டமன்ற உறுப் பினர்கள் இருந்தனர். காங்கிரஸ் கட்சிக்கு 30 சட்டமன்ற உறுப் பினர்கள் இருந்தனர். ஆனால், தற் போது மூன்று சட்டமன்ற உறுப் பினர்கள் பாஜகவுக்கான ஆதரவை திரும்பப் பெற்று காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் காங் கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஜனநாயக ஜனதா கட்சி ஆதரவு அளிக்கும் பட்சத்தில் காங்கிரஸின் பலம் 43 ஆக உயரும். இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் ஆதரவளிக்காமல் நடுநிலை வகிக்கின்றனர். 4 ஜேஜேபி சட்டமன்ற உறுப்பினர்கள் துஷ்யந்த் சவுதாலா நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய நிலையில் அவரது கட்சியைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மேனாள் முதலமைச்சர் மனோகர் லால் கட்டரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
No comments:
Post a Comment