அரியலூர், மே 11- அரியலூர் மாவட்ட திரா விடர் கழகத்தின் சார்பாக சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா மற்றும் குடிஅரசு இதழின் நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
அரியலூர் அண்ணா சிலை அருகில் கடந்த 2.5.2024 மாலை 6 மணிக்கு நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து தலைமையேற்க, ஒன்றிய செயலாளர் த.செந்தில் வரவேற்புரை யாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் சி.காம ராஜ், காப்பாளர் சு.மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புலவர் அரங்கநாதன் மாவட்ட தொழி லாளரணி தலைவர் மதியழகன், மாவட்ட இளைஞரணி தலைவர் க. கார்த்திக்,மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் ,மாவட்ட தலைவர் விடுதலை.
நீலமேகன் ஆகியோர் உரையாற்றியதை தொடர்ந்து கழக அமைப் பாளர் க. சிந்தனைச் செல்வன், தலைமைக் கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் பூவை. புலிகேசி ஆகியோர் சிறப்புரையாற்றினர். சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாட்டால் தமிழர்கள் பெற்றுள்ள உரிமைகள் குறித்தும், தமிழ்நாடு அடைந்துள்ள மாற்றங்கள் குறித்து பூவை. புலிகேசி விளக்கவுரையாற்றினார்.
ஆட்டோ தர்மா நன்றி கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் பொன். செந்தில்குமார், மாவட்ட இணைச் செயலாளர் இரத்தின. ராமச்சந்திரன், மாவட்ட விவசாய அணித் தலைவர் மா. சங்கர், செய லாளர் ஆ. இளவழகன், தொழிலாளரணி செயலாளர் வெ.இளவரசன், செந்துறை ஒன்றிய தலைவர் மு.முத்தமிழ் செல்வன், ஒன்றிய செயலாளர் ராசா. செல்வகுமார், ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், திருமானூர் ஒன்றிய செயலாளர் பெ. கோபிநாதன், நகர செயலாளர் சு.சேகர் செந்துறை, ஒன்றிய அமைப்பாளர் சோ.க.சேகர், அரியலூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் கி. கமலக்கண்ணன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment