திருவள்ளுவருக்கு காவி உடையா? தலைவர்கள் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 25, 2024

திருவள்ளுவருக்கு காவி உடையா? தலைவர்கள் கண்டனம்

featured image

சென்னை, மே 25-திருவள்ளுவர் திருநாள் (24.5.2024) விழா என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட அழைப்பிதழில், திருவள்ளுவர் காவிநிற உடை அணிந்திருப்பது போன்ற படம் வெளியிடப்பட்டி ருந்தது. இதற்கு தமிழ்நாடு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. “அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் நிழற்படத்தை மாற்றி, ஜாதி, மத, சமயம் சார்ந்து ஆளுநர் மாளிகை நிழற்படத்தை வெளியிடுவது சட்டத்திற்குப் புறம்பானது. சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஆளுநரே இப்படிச் செய்வது கண்டனத்திற் குரியது” என்று தமிழ்நாடு காங் கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டித்திருந்தார்.

அமைச்சர் ரகுபதி

“ஏற்கெனவே திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்ததால் சர்ச்சை கிளம்பியது. திரும்பவும் காவி உடையு டன் திருவள்ளுவர் படத்தைப் பயன் படுத்தி அழைப் பிதழ் அடித்து ஆளுநர் மாளிகை வெளியிடுகிறது என்றால், ஆளுநரை என்னதான் செய்ய முடி யும்? வாதத்திற்கு மருந்துண்டு. அவரு டைய பிடிவாதத்திற்கு மருந் தில்லை” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித் திருந்தார்.

டி.கே.எஸ்.இளங்கோவன்

தி.மு.க. செய்தி தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங் கோவன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர் களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், “தை முதல் நாளை திருவள்ளுவர் நாளென அதிகாரப்பூர்வமாக தமிழ் நாடு அரசு ஆண்டுதோறும் கொண் டாடி வருகிறது. ஆளுநருக்கு தமிழ் நாடு பண்பாடும் தெரியாது. தமிழ் நாடு பழக்க வழக்கமும் தெரியாது. திருவள்ளுவரும் தெரியாது. ஆளுநர் தான் திருவள்ளுவருக்கு ஜாதகம் பார்த்தவர் போல நட்சத் திரம் எல்லாம் அறிவித்து திருவள் ளுவருக்கும் காவி உடை அணி வித்து, (24.5.2024) “திருவள் ளுவர் நாள்” கொண்டாடுகிறார்.

இது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை அவமானப்படுத்தும் செயல். திருவள்ளுவருக்கும், ஆளு நருக்கும் எந்த தொடர்பும் இல்லை. வேண்டும் என்றே திட்டமிட்டு பிரமதர் மோடி தொடங்கியதை, ஆளுநர் தொடர்ந்து செய்து வருகிறார்.  ஆளுநரின் செயலை திமுக வன் மையாக கண்டிக்கிறது. திருக்கு றளில் ஒரு குறள் கூட ஆளுநருக்கு தெரியாது. ஆளுநரின் செயல்பாடு களில் அவரின் அறியாமை வெளிப் படுகிறது. இது தமிழர்களுக்கு இழைக்கப்படும் அவமானம்” என்று தெரிவித்தார்.

பேரவைத் தலைவர் அப்பாவு

திருநெல்வேலியில் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் மு.அப் பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆளுநர் மாளிகை வெளியிட்ட அழைப்பிதழில் காவி உடை யில் திருவள்ளுவர் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “ஆளுநரை, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவ ராக, அவருக்கு குல்லா அணிவித்து அவரது துணைவியாருக்கு பர்தா அணிவித்தால் -_ அதை ஏற்றுக் கொள் வார் என்றால், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதை ஏற்றுக் கொள்ளுகிறோம். அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் இதை செய்யக்கூடாது.

No comments:

Post a Comment