தொடரும் பட்டாசு விபத்துக்கள் : தொழிலாளர் நலத்துறை ஆய்வு செய்ய உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 12, 2024

தொடரும் பட்டாசு விபத்துக்கள் : தொழிலாளர் நலத்துறை ஆய்வு செய்ய உத்தரவு

சென்னை, மே 12 பட் டாசு விபத்துகள் தொட ரும் நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள பட் டாசு தொழிற்சாலைகள் உரிமம், தொழிலாளர் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட நிர் வாகங்களுக்கு தொழிலா ளர் நலத் துறை அறிவுறுத் தியுள்ளது.

தமிழ்நாட்டில் பட்டாசு தொழிற்சாலை அதிகமுள்ள விருதுநகர் மாவட்டம் மற்றும் இதர பகுதிகளில் பட்டாசு தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் அடிக் கடி விபத்துகள்நேரிட்டு, உயிர்சேதம் அதிகரிக் கிறது. அண்மையில் விழுப்புரம், தொடர்ந்து தற்போது சிவகாசி என தொடரும் விபத்து களால், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துக்கு உள் ளாகியுள்ளனர். இந் நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பட் டாசு தொழிற்சாலைகள் உரிய உரிமம் பெற்று இயங்குகின்றனவா, தொழிலாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள் ளதா என்பதை மாவட்ட நிர்வாகங்கள் ஆய்வு செய்து, 10 நாட் களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க தொழிலாளர் நலத் துறை உத்தரவிட் டுள்ளது.

தமிழ்நாட்டில் 20-க்கும் மேற்பட்ட மாவட் டங்களில் பட்டாசு தொழிற் சாலைகள் செயல்படும் நிலையில், சில மாதங்கள் முன்னதாகவே ஆய்வு செய்ய உத் தரவிடப்பட்டி ருந்தது. அவற்றில் சில மாவட்டங்கள் ஏற்கெ னவே அறிக்கையை அளித் துள்ளன. தற்போது விருது நகர் உள்ளிட்ட பிற மாவட்டங்களும் அறிக்கை அளிக்குமாறு தொழிலாளர் நலத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகா தார இயக்ககத்தையும் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்குமாறு தொழி லாளர் நலத் துறை அறிவுறுத் தியுள்ளது. தொழி லாளர் பாதுகாப்பு தொடர்பாக விருதுநக ரில் உள்ள பெரிய மற்றும் சிறிய பட்டாசுத் தொழிற் சாலைகளின் உரிமையா ளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத் தையும் நடத்துமாறு தொழிலாளர் நலத் துறை உத்தர விடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment