பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
லக்னோ, மே 14- உத்தரப் பிரதேசத்தின் – ரேபரேலி நகரில் – நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தனது சகோ தரரும், காங் கிரஸ் கட்சியின் ரேபரேலி மக்களவை தொகுதி வேட்பாளரு மான
ராகுல்காந்தியை ஆதரித்து பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளாக வாரணாசி தொகுதி மக்களவை உறுப்பினராக இருக்கிறார். ஆனால், அவர் அங்குள்ள எந்த கிராமத்துக்கும் செல்லவில்லை. எப்படி வாழ்கிறீர்கள் என்று ஒரு விவசாயியிடம் அவர் கேட்க வில்லை. தனியார் மயமாக்கல் தவறானது அல்ல, ஆனால் பிரதமர், தேசத்தின் மொத்த செல்வத்தையும் 4 அல்லது 5 பணக்காரர்களுக்கு கொடுத்தால் அதுசரியல்ல. இன்று நாட்டின் நிலக்கரி, மின்சாரம், துறைமுகங்கள், விமான நிலையங்கள் அனைத்தும் பிரதமரின் நண்பர்களிடம் உள்ளன.
காங்கிரஸ் தலைவர்களான ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி ஆகியோர் பிரதமர்களாக இருந்தபோது, அவர்கள் கிராமங் களுக்கு சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தனர். நமது பிரதமரும் பெரிய சந்திப்புகளை ஏற்பாடு செய்கிறார். ஆனால் அங்கு நீங்கள் பல பெரிய முதலாளிகளை மட்டுமே பார்க்கமுடியும். ஓர் ஏழையைக்கூட காண முடியாது.
– இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.
No comments:
Post a Comment