சென்னை, மே 28- சென்னை விமானநிலையத்தில் விமான பயணிகளின் காத்திருப்பு நேரத்தை குறைக்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் வருகின்ற ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப் பட உள்ளது.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வரும் ஜூன் மாதம் முதல் பயணிகளுக்கு சிரமம் இல்லாத பயணத்தை வழங்கும் வகையில் மத்திய விமான நிலைய ஆணையம் தனது டிஜிட்டல் முயற்சியான ‘டிஜியாத்ரா’ திட்டத்தை அறிமுகப்படுத்தி யுள்ளது.
இந்த டிஜியாத்ரா திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பரில் துவங்கப்பட்டது. இது விமான பயண செயல்முறையை காகிதமற்றதாக்குகிறது. அதாவது பயணிகள் விமான நிலையத்தில் நுழைவதில் இருந்து பாதுகாப்பு வழியில் செக்கின் செய்து உள்ளே சென்று விமானத்தில் ஏறும் போதும், தங்களது பொருட்களை சரி பார்க்கும் வேளையிலும் தங்களது முகத்தையும் காட்டினால் மட்டும் போதும். இந்த திட்டத்தில் பயணிகள் கடவுச்சீட்டு, ஆதார் அல்லது பிற ஆவணங்களை அதிகாரிகளிடம் காட்ட வேண்டிய தேவை இல்லை.
டிஜியாத்ரா என்பது முகத்தை அடை யாளம் காணும்தொழில்நுட்ப மாகும். இந்த டிஜி யாத்ரா திட்டத்தில் மத்திய விமான நிலையங்கள் ஆணையம் மூலம் உருவாக்கப்பட்ட டிஜியாத்ரா மொபைல் ஆப் மூலம் பயணிகள் தங்களது பய ணத்தை எளிதாக தொடர முடியும்.
தற்போது 4.58 மில்லியன் பயனர்களைக் கொண்ட இந்த டிஜியாத்ரா திட்டத்தில் சென்னை விமான நிலையம் இணைய உள்ளது. தற்போது நாட்டில் 14 விமான நிலையங்களில் இந்த வசதி உள் ளது. தற்போது இதில் சென்னை விமான நிலையமும் இணைய உள்ளது.
இந்த டிஜியாத்ரா திட்டம் சென்னை விமான நிலையத்தில் கடந்த மார்ச் 31ஆம் தேதி அறிமுகப் படுத்த இருந்த நிலையில், விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு ஒப்புதல் தர தாமதமானதால் இன்னும் அறிமுகப்படுத்தப் படவில்லை. இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்குவதில் பல்வேறு அமைச் சகங்களின் பணியும் இருப்பதால் ஒவ்வொரு விமான நிலையத்திற்கும் தனித்தனி ஒப்புதல் பெற வேண்டி உள்ளது.
இதனால் சென்னை விமான நிலையத்திற்கு இந்த வசதி வர தாமதமானதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த மாதம் அதாவது ஜூன் முதல் இந்த திட்டம் சென்னை விமானநிலையத்தில் அறி முகப்படுத்தப்படஉள்ளது. இதன் மூலம் விமானப் பயணிகளின் காத்திருப்பு நேரம் குறையும்.
No comments:
Post a Comment