புதுடில்லி, மே 25 இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான போராட் டம் தான் இந்தத் தேர்தல் என்று காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
மக்களவைத் தேர்தலையொட்டி வட கிழக்கு டில்லியின் தில்ஷத் கார்டன் பகுதியில் காங்கிரஸ் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் வேட்பாளரை கன் னையா குமாரை ஆதரித்து ராகுல் காந்தி பேசியதாவது:
இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பமாக இருந்து வருகிறது. பாஜக வினர் அரசமைப்புச் சட்டத்தை கிழித்து எறிய விரும்புகின்றனர். இந்திய அரச மைப்புச் சட்டத்தையோ, இந்தியக் கொடி யையோ அவர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை.
அரசமைப்புச் சட்டத்தை மாற்ற விரும் புவதை இந்தத் தேர்தலில் இறுதியாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அர சமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதற்கான போராட்டம் தான் இந்தத் தேர்தல்.
நமது அரசமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல. காந்தியார், அம்பேத்கர் மற்றும் நேருவின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால சித்தாந்த பாரம்பரியத்தை அது கொண்டுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தை பாஜக மாற்ற முயன்றால், எதிர்க்கட்சிகளையும், நாட் டின் கோடிக்கணக்கான மக்களையும் அக்கட்சி எதிர்கொள்ள வேண்டியிருக் கும். எனவே, அதனை மாற்றும் தைரியம் அக்கட்சிக்கு இருக்காது என்று அவர்களி டம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
No comments:
Post a Comment