புதுச்சேரி, மே 13- புதுச்சேரியில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனாரின் 134-ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டா டப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக 11-.5.-2024 மாலை 6.30 மணியளவில் புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கு.இரஞ்சித்குமார் தலை மையில், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ.நடராசன் முன்னிலை யில், செயலாளர் பா. குமரன் வரவேற்புரையில், விடுதலை வாசகர் வட் டத் தலைவர் கோ.மு.தமிழ்ச் செல்வன் தொடக்கவுரை ஆற்றினார்.
மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வே.அன் பரசன் அன்னை நாகம் மையாரின் நினைவு நாளை முன்னிட்டு அம்மாவின் தொண்டறப் பணிகளை விரிவாக எடுத்துக் கூறினார்.
சுயமரியாதை இயக்கம், குடிஅரசு இதழ் நூற்றாண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு தமிழினம் அடைந்துள்ள பயன்பாடுகள் பற்றிய சிறப்பான தகவல்களை எடுத்துக் கூறி புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழ கத் தலைவர் சிவ.வீரமணி உரையாற்றினார்.
எழுத்தாளர் சத்தியப் பெருமாள் பாலுசாமி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியினை ப.க. எழுத்தாளர் மன்ற துணைப் பொதுச் செயலாளர் வி.இளவரசி சங்கர் ஒருங்கிணைததார்.
நிகழ்ச்சியில் மாவட் டத் துணைத் தலைவர் மு.குப்புசாமி, பொதுக் குழு உறுப்பினர் லோ.பழனி, தொழிலாளரணிச் செயலாளர் கே.குமார், இளைஞரணித் தலைவர் தி.இராசா, துணைத் தலைவர் ச.பிரபஞ்சன், புதுச்சேரி நகராட்சி வடக்குப் பகுதி தலைவர் மு.ஆறுமுகம், செயலா ளர் களஞ்சியம் வெங்க டேசன், வில்லியனூர் கொம்யூன் தலைவர் கு.உலகநாதன், பெ.ஆதி நாராயணன், பாகூர் பெ.தாமோதரன், ஜெ.வாசுகி பாலமுருகன், மு.வீரமணி, முனைவர் சிவ. இளங்கோ, இள. கோவலன், பெ. நல்ல சாமி,அ.ச.தினா, ர.தருண், ப.பசுபதி, ச.லாரன்ஸ், மு. நவீன், அ.ஆனந்தி, அ.ஜாகிர் உசேன், கரு.பிரியன் உட் பட பலர் கலந்து கொண் டனர். நிறைவாக இளை ஞரணிச் செயலாளர் ச.சித்தார்த் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment