அந்தோ, பாவம்! பிரதமர் மோடி - அதானி, அம்பானியிடம் மன்றாடுகிறார்! ராகுல் காந்தி விமர்சனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 12, 2024

அந்தோ, பாவம்! பிரதமர் மோடி - அதானி, அம்பானியிடம் மன்றாடுகிறார்! ராகுல் காந்தி விமர்சனம்

featured image

கன்னாஜ், மே 12— தன்னை காப்பாற்று மாறு அதானி, அம்பானியிடம் பிரதமர் மோடி மன்றாடி வருவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாகப் பிரசாரம்
உத்தரப்பிரதேசத்தின் பிரதான கட் சிகளில் ஒன்றான சமாஜ்வாடி இந்தியா கூட்டணி சார்பாக மாநிலத்தில் நாடா ளு மன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த கட்சியின் தலைவரும், மேனாள் முதல் அமைச்சருமான அகிலேஷ் யாதவ் அங்குள்ள கன்னாஜ் தொகுதியில் கள மிறங்கி உள்ளார்.

இவரை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். கன்னாஜ் பகுதியில் நடந்த இந்த பிரச்சார கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் மற்றும் ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங்குடன் ராகுல் காந்தியும் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பேசும் போது அவர் கூறியதாவது:-
இந்த தேர்தலில் பா.ஜனதா தோற் பது உறுதியாகிவிட்டது. இந்தியாவின் பிரதமராக இந்த முறை மோடி வரமாட் டார். எல்லாம் முடிந்து விட்டது. இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இந்திய ஒற்றுமை பயணம். நியாய பயணம் மற் றும் எதிர்க்கட்சிகளின் கூட்டங்கள் மூலம் தேர்தலுக்கான ஆயத்தப் பணி களை கடந்த பல மாதங்களாக இந்தியா கூட்டணி செய்துள்ளது. வெறுப்பு பஜாரில் அன்பு கடைகளை திறந்துள்ளன.

கடந்த 10 ஆண்டுகளாக அதானி, அம் பானியின் பெயர்களைக்கூட மோடிஜி கூறாமல் இருந்ததை நீங்கள் பார்த்திருப் பீர்கள். ஆனால் அவர்களின் பெயரை தற்போது கூறுகிறார். அவர்கள் தன்னை பாதுகாப்பார்கள் என நினைக்கிறார். ‘இந்தியா கூட்டணி என்னை சுற்றி வளைக் கிறது, நான் தோற்றுக் கொண்டிருக்கிறேன். என்னை காப்பாற்றுங்கள். அதானி-அம் பானிஜி என்னை காப்பாற்றுங்கள்’ என அவர்களிடம் மன்றாடுகிறார்.

எந்த டெம்போவில், என்ன மாதிரி யான பணத்தை அதானிஜி அனுப்பு கிறார் என்பது அவருக்கு தெரியும். ஏனெனில் அவருக்கு தனிப்பட்ட முறை யில் டெம்போவின் அனுபவம் உண்டு.

இந்த கூட்டத்துக்கு வந்து கொண்டி ருந்த வாகனங்கள் தடுத்து நிறுத்தப் பட்டதாக தகவல்கள் வெளியாகி உள் ளன. இது கன்னாஜ் தொகுதியில் அகி லேஷ் யாதவின் வெற்றியை தடுக்காது.

உத்தரப்பிரதேசத்திலும் இந்தியா கூட்டணி புயல் வந்து கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். இதை எழுதி வைத் துக் கொள்ளுங்கள். உத்தரப்பிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு படுதோல்வி ஏற்படப் போகிறது.

ஏனெனில் உத்தரப்பிரதேசத்தில் மாற் றம் ஏற்படப்போகிறது என மக்களே அறிந்து கொண்டனர். இந்தியாவில் ஒரு மாற்றம் ஏற்படப்போகிறது. இதை மக் கள் தங்கள் மனதில் உறுதிப்படுத்தி விட்டனர்.
– இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

13ஆம் தேதி தேர்தல்
இந்த கூட்டத்தில் சமாஜ்வாடி தலை வர் அகிலேஷ், ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் ஆகியோரும் உரையாற்றினர். அகிலேஷ் களமிறங்கி உள்ளதால் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற் படுத்தி உள்ள இந்த கன்னாஜ் தொகுதியில் நாளை (13.5.2024) தேர்தல் நடக்கிறது.

No comments:

Post a Comment