பிளஸ் டூ தேர்வில் வெற்றி - கல்லூரியில் இடம் இல்லை திருநங்கைக்கு மாவட்ட ஆட்சியர் உதவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 12, 2024

பிளஸ் டூ தேர்வில் வெற்றி - கல்லூரியில் இடம் இல்லை திருநங்கைக்கு மாவட்ட ஆட்சியர் உதவி

கோவை,மே.12– கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் திருநங்கை அஜிதா (வயது 17). இவர் கோவை மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-2 படித்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அஜிதா 373 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய ஒரே திருநங்கை மாணவி அஜிதாதான். பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி அடைந்ததும், அவருக்கு பி.எஸ்.சி உளவியல் படிப்பு படிக்க ஆசை. இதற்காக பல கல்லூரிகளுக்கு சென்று விண்ணப்பம் கேட்டுள்ளார். ஆனால் இடம் கிடைக்கவில்லை. இதனால் திக்கு தெரியாமல் தவித்துள்ளார். இதுபற்றி தகவல்அறிந்த கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மாணவி அஜிதா படிப்பதற்கு உதவிக்கரம் நீட்டினர். கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், அவர் விரும்பிய இளநிலை படிப்பை படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அத்துடன் மாநகர காவல்துறை, மாணவி அஜிதா படிப்பதற்கான அனைத்து செலவுகளையும் தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளனர். இது மாணவி அஜிதாவை நெகிழ்ச்சி அடைய செய் துள்ளது. இதனால் அவர், தானும் சக மாண விகள் போல் கல்லூரி செல்வதற்கான நாளை எண்ணி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

No comments:

Post a Comment