ராகுல் காந்தியின் சமூகநீதிக்குரல் ஜாதிவாரிக் கணக்கெடுப்பின்மூலம் அனைவருக்கும் சமத்துவத்தை உறுதி செய்வோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 14, 2024

ராகுல் காந்தியின் சமூகநீதிக்குரல் ஜாதிவாரிக் கணக்கெடுப்பின்மூலம் அனைவருக்கும் சமத்துவத்தை உறுதி செய்வோம்!

featured image

புதுடில்லி, மே 14- “ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் அனைவருக்கும் சமத்துவத்தை உறுதி செய்வோம்” என்று காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற் போது வரை3 கட்ட வாக்குப்பதிவு முடிந் துள்ளது.4ஆவது கட்ட வாக்குப்பதிவு நேற்று (13.5.2024) நடைபெற்றது. தேர்தல் பிரச்சாரங் களின்போது பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் தலைவர்கள்மாற்றி மாற்றி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
பா.ஜ.க.மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசமைப்புச் சட்டத்தையே மாற்றி விடுவார்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசி வருகிறார். அதேபோல், காங்கிரஸ் ஆட்சிஅமைந்தால் இடஒதுக்கீடு அனைத்தையும் முஸ்லிம்களுக்கு ஒதுக்கு வார்கள்என்றும், மக்களின் சொத்துகளை பறித்துக் கொள்வார்கள், அயோத்தி இராமன் கோயிலை மூடி விடுவார்கள் என்று பிரதமர் மோடி பேசி வருகிறார்.

மேலும், அண்மையில் பிரதமர் மோடி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். “அதானி மற்றும் அம்பானியிடம் இருந்து டெம் போக்களில் காங்கிரஸ் கட்சிக்கு பணம் சென்றுள்ளது, அதனால் தான் சமீபமாக ராகுல் காந்தி அதானி, அம்பானி பற்றி பேசுவதில்லை” எனக் கூறினார். அதற்கு ராகுல் காந்தி, டெம்போவில் பணம்பெற்றதாக தனது சொந்த அனுபவத்தில் பிரதமர் பேசியுள்ளாரா என விமர்சித்தார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, மக்களவைத் தேர்தல் தொடர்பாக நேருக்கு நேர்விவாதம் நடத்த வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மூத்த பத்திரிகையாளர் என்.ராம், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி.லோக்கூர், ஓய்வு பெற்ற டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஜீத் பி.ஷா ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில், “பா.ஜ.க., காங்கிரஸ் இரண்டுமே தேர்தலில் போட்டி யிடும் முக்கிய கட்சிகள் என்பதால், பொது மக்கள் தங்கள் தலைவர்களிடம் நேரடியாகக் கேட்கத் தகுதியானவர்கள். பிரதமர் மோடி எப்போது விவாதத்தில் பங்கேற்க ஒப்புக்கொள்கிறார் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்தவும். நாங்கள்தயார்” என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடி விவாதத்தில் பங்கேற்பது தொடர்பாக இதுவரை எந்த பதிலும் தெரி விக்கவில்லை. அதேசமயம், பா.ஜ.க. அமைச் சர் ஸ்மிருதி இரானி, “இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியாக இல்லாத போது, பிரதமர் மோடி போன்ற உயர் பதவியில் இருப்பவருடன் எப்படி அவரால் விவாதிக்க முடியும்”என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்நிலையில், ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் நேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், “கடந்த 10 ஆண்டுகளாகஅவர்கள் பெரும் பணக்காரர்களிடம் இருந்து டெம் போக்களில் பெற்ற ‘நோட்டுகளை’ எண்ணு கிறார்கள். நாங்கள் ‘ஜாதிக் கணக்கெடுப்பு’ மூலம் நாட்டை எக்ஸ்ரே செய்வோம். ஒவ் வொரு பிரிவினருக்கும்சமமான பங்களிப்பை உறுதி செய்வோம்.” எனக் குறிப்பிட்டுள் ளார். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. அரசை விமர் சிக்கும் கட்சி விளம்பரத்தையும் அவர் பகிர்ந் துள்ளார். அதானியும் அம்பானியும் கறுப்புப் பணத்தை அனுப்பினார்களா என்பது குறித்து சி.பி.அய். அல்லது அமலாக்கத்துறை விசார ணைக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

No comments:

Post a Comment