பிரதமர் மோடி பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டங்கள்: விவசாயிகள் கருப்புக் கொடி போராட்ட அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 23, 2024

பிரதமர் மோடி பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டங்கள்: விவசாயிகள் கருப்புக் கொடி போராட்ட அறிவிப்பு

அரியானா, மே 23 கடந்த 2020இல் போராட்டம் நடத்தியது போன்று, குறைந்தபட்ச ஆதார விலை உள் ளிட்ட 13 கோரிக்கைகளை நிறை வேற்றக் கோரி கடந்த மார்ச் மாதம் முதல் விவசாயிகள் மீண்டும் இரண் டாம் கட்டப் போரா ட்டத்தை டில்லி எல்லையில் தொடங்கினர். 2020-2021 இல் நடத்தப்பட்ட தாக்குதல் (800-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர்) போன்று இரண்டாம் கட்டப் போராட்டத்திலும் விவசாயி கள் மீது மோடி அரசு தாக்குதல் நடத் தியது. இந்தக் கொடூர தாக்குதலில் 5 விவசாயிகள் உயிரிழந்தனர். பல நூறு விவசாயிகள் காயமடைந்தனர். காயமடைந்த விவசாயிகளை மருத் துவமனையில் அனுமதிக்க, விவசா யிகள் பெரும்பாலானோர் டில்லி எல்லையை விட்டு நகர்ந்தனர். இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மோடி அரசு, அரியானா பாஜக அரசுடன் இணைந்து மீண்டும் விவசாயிகள் போராட முடியாமல் கண்காணிப்பை தீவிரப்படுத்தி டில்லி எல்லையை தடுப்புகளால் அன்றி பாதுகாப்பு கட்டமைப்பி லேயே மூடியது.
இதனால் பஞ்சாப் விவசாயிகள் டில்லி – அரியானா எல்லைப் பகுதி யான ஷம்பூ எல்லையில் 3 மாதத் திற்கு மேலாகப் போராடி வருகின்ற னர். இந்நிலையில், ஷம்பூ எல்லை யின் விவசாயிகளின் போராட்டம் இன்றோடு (23.5.2024) 100ஆவது நாளை எட்டுகிறது.

மோடியின் பிரச்சாரக் கூட்டத்திற்கு சிக்கல்
100ஆவது நாளில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தவிருப்ப தாக ஏற்கெனவே விவசாயிகள் அறிவித்த நிலையில், அதே நாளில் (மே 23) பஞ்சாப் மாநிலத்தில் (மே 23 – பாட்டியாலா, மே 24 – குர்தாஸ் பூர் மற்றும் ஜலந்தர்) மக்களவை பிரச்சாரத்தை பிரதமர் மோடி துவங் குகிறார். இதனை அறிந்த விவசாயி கள் 100ஆவது போராட்ட நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி பங்கேற் கும் பிரச்சாரக் கூட்டங்களில் கருப் புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் பிரச் சார நேரமான 2022 ஜனவரி 5 அன்று பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி ஹுசைனிவாலா (பஞ்சாப் எல்லை) என்ற இடத்தில் விவசாயிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதால், வந்த வழியிலேயே திரும்பிச் செல்ல வேண்டியதாயிற்று. இந்நிகழ்வு போன்று விவசாயிகளின் 100ஆவது நாள் போராட்டமும் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற அதிர்ச்சியில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக வினர் உறைந்துள்ளனர்.

No comments:

Post a Comment